கடன் வேண்டாம்
2024 ஜனவரி 2 முதல் ஜனவரி 8-ஆம் தேதி வரையிலான ராசிபலன். கணித்து வழங்குபவர் ஜோதிட இமயம் அபிராமி சேகர்.
சொந்த தொழில் மற்றும் கூட்டுத் தொழில் சிறப்பாக இருக்கும். அதேபோன்று திருமண வாழ்க்கையும் சிறப்பாக உள்ளது. வேலையில் எதிர்பார்த்த முன்னேற்றம் மற்றும் எதிர்பாராத நிகழ்வுகள் உங்களுக்கு சாதகமாக அமையும். வங்கி கடனுக்கு விண்ணப்பித்திருந்தால் கிடைக்க வாய்ப்புள்ளது. கடன் வாங்குவதை தவிர்ப்பது நல்லது. நண்பர்களால் சந்தோஷம் உண்டாகும். மூத்த சகோதர - சகோதரிகளாலும் நன்மை உண்டாகும். உற்பத்தி துறையில் இருப்பவர்களுக்கு வருமானம் அதிகரிக்கும். கல்வியில் கவனம் செலுத்துவது நல்லது. வருமானம் நல்லா இருக்கும். நீங்கள் மேற்கொள்ளும் முயற்சிகள் உங்களுக்கு சாதகமாக இருக்கும். பெரிய முயற்சிகள் வெற்றியை தரும். முருக வழிபாடும், சிவன் தரிசனமும் நல்லது.