குழந்தை பாக்கியம்

Update: 2024-07-01 18:30 GMT

2024 ஜூலை 02-ஆம் தேதி முதல் ஜூலை 08-ஆம் தேதி வரையிலான ராசிபலன். கணித்து வழங்குபவர் ஜோதிட இமயம் அபிராமி சேகர்.

உங்களின் வேலையில் பொறுமையாகவும், நிதானமாகவும் செயல்படுங்கள். செய்யும் வேலையை திருப்தியோடு செய்யுங்கள். இல்லையென்றால் இந்த வாரம் முழுவதும் திருப்தியற்ற மனநிலையில்தான் இருப்பீர்கள். மண வாழ்க்கையில் மகிழ்ச்சி, சந்தோஷம் இருக்கும். சொந்த தொழில் நன்றாக உள்ளது. கூட்டுத்தொழிலில் இருவரும் லாபம் அடைவீர்கள். புதிதாக தொழில் தொடங்குவதோ, தொழிலில் பெரிய அளவில் முதலீடுகள் செய்வதோ வேண்டாம். லாபம் வருவது போன்ற ஒரு தோற்றம். ஆனால் சுமாராகத்தான் உள்ளது. குழந்தை பாக்கியம் கிடைப்பதற்கான வாய்ப்புகள் உள்ளன. குழந்தைக்காக சிகிச்சை எடுத்தால் அதுவும் வெற்றி பெறும். உற்பத்தி சார்ந்த துறைகளில் இருப்பவர்களுக்கு புரொடக்சனுக்கு தகுந்த நல்ல விற்பனை இருக்கிறது. விவசாயம் சார்ந்த துறைகளில் இருப்பவர்களுக்கும் எதிர்பார்த்த லாபம், வருமானம் கிடைக்கும். எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியையும் கவனமாக எடுத்து வையுங்கள். பெரிய அளவில் ஷேர், டிரேடிங், மியூச்சுவல் ஃபண்ட் போன்றவற்றில் முதலீடு செய்ய வேண்டாம். கலைத்துறையில் இருப்பவர்களுக்கு பாப்புலாரிட்டி, பப்ளிசிட்டி இருக்கிறது. அரசியல் வாழ்க்கையில் கவனம் தேவை. இந்த வாரம் முழுவதும் சிவன் மற்றும் அம்பாள் வழிபாடு பிரதானமாக செய்யுங்கள்.

Tags:    

மேலும் செய்திகள்