மணவாழ்க்கையில் மகிழ்ச்சி

Update: 2024-07-22 18:30 GMT

2024 ஜூலை 23ஆம் தேதி முதல் ஜூலை 29-ஆம் தேதி வரையிலான ராசிபலன். கணித்து வழங்குபவர் ஜோதிட இமயம் அபிராமி சேகர்.

சொந்த தொழில் சுமாராக இருக்கும். மணவாழ்க்கை மகிழ்ச்சிகரமாக இருக்கும். உங்கள் கையில், பணம், தனம் இருந்தாலும் செலவினங்களும் இருக்கிறது. பேச்சின் மூலமாக நன்கு வருமானத்தை சம்பாதிப்பீர்கள். உங்களுடைய முயற்சிகளில் ஆரம்பத்தில் தடைகள் இருந்தாலும், கடுமையான போராட்டத்திற்கு இடையில் வெற்றி உண்டு. தேவை இருந்தால் புதிய விஷயங்களில் ஈடுபடுங்கள். இல்லையென்றால் எதிலும் பெரிதாக கலந்து கொள்ளாமல் அமைதியாக இருங்கள். எல்லாமே உங்களுக்கு சாதகமாக இருப்பது போல் இருக்கும். ஆனால், கிரக நிலைகள் உங்களுக்கு சாதகமாக இல்லை. எல்லாவிதமான உறவுகளையும் பலப்படுத்துங்கள். உற்பத்தி சார்ந்த துறைகளில் இருப்பவர்களுக்கு புரொடக்சனுக்கு தகுந்த விற்பனை இருக்கிறது. ஆனால், வருமானம் குறைவு. கல்வியில் தடை இருக்கிறது. அம்மா மற்றும் உங்களின் உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துங்கள். விட்டதை பிடிக்க ஆசைப்பட்டு ஷேர் மார்க்கெட், ரேஸ், லாட்டரி, டிரேடிங், மியூச்சுவல் ஃபண்ட், டிஜிட்டல் கரன்சி, கிரிப்டோ கரன்சி போன்ற எதிலும் முதலீடு செய்ய வேண்டாம். டிராவல் அதிகமாக இருக்கும். கலைத்துறையில் இருப்பவர்களுக்கு பாப்புலாரிட்டி இருக்கிறது. அரசியல் வாழ்க்கை ஏற்றம் மிகுந்ததாக இருக்கும். விளையாட்டுத் துறையில் இருப்பவர்களுக்கு விருதுகள், கேடயங்கள் கிடைக்க வாய்ப்புகள் உண்டு. வேலையை பொறுத்தவரை சின்ன சின்ன மாற்றங்கள் உள்ளது. இந்த வாரம் முழுவதும் சிவன் மற்றும் மகாலட்சுமியை வழிபாடு செய்யுங்கள்.    

Tags:    

மேலும் செய்திகள்