சமூக அக்கறை கூடும்

Update:2024-07-30 00:00 IST

2024 ஜூலை 30-ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 05-ஆம் தேதி வரையிலான ராசிபலன். கணித்து வழங்குபவர் ஜோதிட இமயம் அபிராமி சேகர்.

சொந்த தொழில் நன்றாக இருக்கும். மணவாழ்க்கை மகிழ்ச்சிகரமாக இருக்கும். பொருளாதார நிலைகள் பரவாயில்லை என்பதால் உங்கள் கையில், பணம், தனம், பொருள் இருக்கும். பெரியளவில் முயற்சிகள் எதுவும் எடுக்காதீர்கள். அவை வெற்றி அடைய வாய்ப்புகள் இல்லை. இளைய சகோதர - சகோதரிகளால் தேவையற்ற மனவருத்தங்கள், பிரச்சினைகள் இருக்கின்றன. சிறு தொழில், சுயதொழில் வீட்டில் வைத்து செய்ய கூடிய தொழில், ஆன்லைன் பிசினஸ் அனைத்துமே சுமாராக உள்ளது. சொந்த தொழில் செய்தால் தொழில் தகராறு, தொழில் நிச்சயமற்ற தன்மை இருக்கும். ஆனாலும், தொழில் விட்டு விட்டு நடக்கும். எந்த துறையில் பணியாற்றினாலும் உங்கள் வேலையில் திருப்தியற்ற மனநிலையில்தான் இருப்பீர்கள். உடன் பணியாற்றுபவர்கள், உயர் அதிகாரிகள் ஒத்துழைப்பு தர மாட்டார்கள். உங்களின் தனிப்பட்ட வாழ்க்கை குறித்து யாரிடமும் பகிர்ந்து கொள்ளாதீர்கள். ஷேர் மார்க்கெட், ரேஸ், லாட்டரி தவிர ஏதாவது ஒரு வணிகத்தில் முதலீடு செய்ய நினைப்பவர்கள் செய்ய வேண்டாம். அதனால் லாபம் இல்லை. உங்களின் நட்பு வட்டாரம் டெவலப் ஆகும். மூத்த சகோதர - சகோதரிகளால் நன்மை ஏற்படும். எது எப்படி இருந்தாலும் உங்கள் கௌரவம், அந்தஸ்து, புகழ், செல்வம், செல்வாக்குக்கு ஆகியவற்றுக்கு குறை இருக்காது. சமூக அக்கறை கூடும். உங்கள் மதத்தின் மீது பற்று ஈடுபாடு இருக்கும். இந்த வாரம் முழுவதும் பெருமாள் கோயிலில் இருக்கக்கூடிய கருடாழ்வார் மற்றும் சிவன் கோயிலில் இருக்கக்கூடிய நந்தியம் பெருமானை வழிபாடு செய்யுங்கள்.    

Tags:    

மேலும் செய்திகள்