உடல் ஆரோக்கியத்தில் கவனம்
2024 பிப்ரவரி 6 முதல் பிப்ரவரி 12-ஆம் தேதி வரையிலான ராசிபலன். கணித்து வழங்குபவர் ஜோதிட இமயம் அபிராமி சேகர்.
நினைத்தவை அனைத்தும் நடக்கும். நம்பியவர்கள் உதவிகரமாக இருப்பார்கள். நீங்கள் எதிர்பார்த்த, எதிர்பாராத செய்திகள் உங்களுக்கு சாதகமாக வரும். உறவுகளால் மகிழ்ச்சி, சந்தோஷம் உண்டாகும். வீடு, இடம் மாற நினைப்பவர்கள் மாறலாம். நீண்ட காலமாக நிலுவையில் உள்ள சொத்துக்களை விற்பதற்கு, அக்ரிமெண்ட் போடுவதற்கு வாய்ப்புகள் உண்டு. உங்களை நீங்களே பெரிய அளவில் முன்னேற்றி கொள்வதற்கான வாய்ப்புகள் உள்ளன. அம்மா மற்றும் உங்களது உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. ஏதோவொரு வேலை, வருமானம் இருந்து கொண்டே இருக்கும். நல்ல முன்னேற்றம் ஏற்படும். கடனுதவி கேட்டு விண்ணப்பித்திருந்தால் கிடைக்கும். போட்டித்தேர்வு எழுதியிருந்தால் வெற்றி பெறுவீர்கள். புகழ், அந்தஸ்து கூடும். உங்களது குலதெய்வம், துர்கை மற்றும் காளியை வழிபடுவதால் மகிழ்ச்சி, சந்தோஷம் உண்டாகும்.