உறவுகளை பலப்படுத்துங்கள்

Update:2024-08-27 00:00 IST

2024 ஆகஸ்ட் 27-ஆம் தேதி முதல் செப்டம்பர் 02-ஆம் தேதி வரையிலான ராசிபலன். கணித்து வழங்குபவர் ஜோதிட இமயம் அபிராமி சேகர்.

பொருளாதார வசதிகள், அதற்கான சந்தர்ப்பங்கள் இருந்தால் முதலீடு செய்யுங்கள். ஒருவேளை அப்படியான சூழல் இல்லையென்றால் தேவையில்லாத செலவினங்களை சந்திப்பதற்கான வாய்ப்புகள் உள்ளன. பேச்சை குறையுங்கள். பேச்சின் மூலமாகவும் கிடைக்கும் வருமானங்கள் சுமாராகத்தான் உள்ளது. எந்த முயற்சி எடுத்தாலும் வெற்றியடைய வாய்ப்பில்லை. எதிர்பார்த்த செய்திகளில் தடை ஏற்பட்டு தாமதமாக வரும். உறவுகளால் தேவையற்ற மனவருத்தங்கள், பிரச்சினைகள், போராட்டங்கள் ஏற்படும் என்பதால் எல்லாவிதமான உறவுகளையும் பலப்படுத்துங்கள். நெருங்கிய உறவுகள் உங்களை விட்டு பிரிந்து போவதற்கான வாய்ப்பு அல்லது நீங்கள் அவர்களை விட்டு பிரிந்து போவதற்கான வாய்ப்புகள் உள்ளன. விற்பனையாகாத சொத்துக்கள் விற்பனையாகும். புதிய காதல் விஷயங்கள்; ஜாதி, மதம், மொழிக்கு அப்பாற்பட்ட தொடர்புகள் ஏற்படும். உங்கள் காதல் வெற்றியடையவும், ஏற்கனவே முறிந்த காதல் மீண்டும் சேரவும் வாய்ப்புள்ளது. வேலையை பொறுத்தவரை வேறு அலுவலகம் மாறுவதற்கோ, பேப்பர் போடுவதற்கான வாய்ப்புகளோ உள்ளன. வேலையில் கவனம் செலுத்துவதுடன், கிடைத்த வேலையை திருப்திகரமாக செய்யுங்கள். இந்த வாரம் முழுவதும் பிரம்மாவையும், சிவனையும் வழிபாடு செய்யுங்கள். 

Tags:    

மேலும் செய்திகள்