காதல் மகிழ்ச்சி

Update: 2024-04-15 18:30 GMT

2024 ஏப்ரல் 16-ஆம் தேதி முதல் ஏப்ரல் 22-ஆம் தேதி வரையிலான ராசிபலன். கணித்து வழங்குபவர் ஜோதிட இமயம் அபிராமி சேகர்.

நீங்கள் நினைப்பது நடப்பதற்கான வாய்ப்புகள் உள்ளன. இந்த வாரத்தில் உங்களது வேலை நன்றாக உள்ளது. வங்கி கடனுக்கு விண்ணப்பித்திருந்தால் கிடைக்கும். வீடு, இடம் மாற நினைப்பவர்களுக்கு தடைகள் இருந்துகொண்டு இருக்கிறது. சொத்துக்கள் விற்பதிலும் பிரச்சினைகள் உள்ளன. உங்கள் வேலையில் பணி உயர்வு, சம்பள உயர்வு போன்றவற்றை எதிர்பார்ப்பவர்களுக்கு அதற்கான வாய்ப்புகள் உண்டு. காதல் விஷயங்கள் மகிழ்ச்சி சந்தோஷத்தை கொடுக்கும். காதல் வெற்றி பெரும். முறிந்துபோன காதல் மீண்டும் சேரும். குடும்பத்தில் சுப காரியங்கள், சுப நிகழ்ச்சிகள் நடைபெறும். திருமணம் ஆகாதவர்களுக்கு திருமணம் நடக்கும். பொழுதுபோக்கு நிகழ்வுகள் பெரிய அளவில் இருக்கும். உடல் உழைப்பு இல்லாமலே சம்பாத்தியம் செய்வீர்கள். உயர்கல்வியை பொறுத்தவரை நன்றாக உள்ளது. நண்பர்களால் மகிழ்ச்சி, சந்தோஷம் உண்டு. அதிலும் ஆண் நண்பர்கள் மற்றும் மூத்த சகோதரிகளால் நன்மைகள் உண்டு. விநாயகர் மற்றும் நரசிம்மரை வழிபடுங்கள் நல்லதொரு ஏற்றம் பெறுவீர்கள். 

Tags:    

மேலும் செய்திகள்