புதிய காதல் மலரும்

Update: 2024-02-26 18:30 GMT

2024 பிப்ரவரி 27 முதல் மார்ச் 4-ஆம் தேதி வரையிலான ராசிபலன். கணித்து வழங்குபவர் ஜோதிட இமயம் அபிராமி சேகர்.

இந்த வாரம் இடம், வீடு, வாகனம், வீட்டு உபயோகப்பொருட்கள் வாங்க நினைப்பவர்களுக்கு அதற்கான சூழ்நிலைகள் தானாக அமையும். உற்பத்தி சார்ந்த துறைகளில் இருப்பவர்களுக்கு விற்பனைக்கு ஏற்ற லாபம் கிடைக்கும். ஆட்டோமொபைல், மெக்கானிக்கல், இன்ஜினியரிங் என எந்த துறையாக இருந்தாலும் லாபம் இருக்கும். வேலை நன்றாக இருந்தாலும், அதில் ஒருவித பயத்துடனேயே இருப்பீர்கள். தேவை இருந்தால் தவிர கடன் வாங்க வேண்டாம். சொந்த தொழில் செய்தீர்கள் என்றால் தொழில் தகராறு, தொழில் நிச்சயமற்ற தன்மை காணப்படும். புதிய காதல் உருவாகும். ஏற்கனவே தொடரும் காதல் வெற்றியடையும். எதிர்பாராமல் சுப காரியங்கள், சுப நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள். ஒருபுறம் கடன், நோய் பிரச்சினைகள் குறைவது போன்ற தோற்றமும், மற்றொருபுறம் அதிகரிப்பது போன்ற தோற்றமும் உண்டாகும். உங்களது கௌரவம், புகழ், அந்தஸ்து கூடும். நண்பர்களால் மகிழ்ச்சி, சந்தோஷம் உண்டாகும். குறிப்பாக ஆண் நண்பர்களால் நற்பலன்கள் கிடைக்கும். வேலையில் எதிர்பார்த்த முன்னேற்றம் கிடைக்கும். எதிர்பாராத பண வரவுகள் இருக்கும். உங்கள் உழைப்பு மற்றவர்களுக்கு லாபம். உங்களுக்கு பிரயோஜனம் இல்லாததால் எல்லாவற்றிலும் கவனமுடன் இருப்பது நல்லது. மகாவிஷ்ணு மற்றும் விநாயகர் வழிபாடு முன்னேற்றம் தரும்.

Tags:    

மேலும் செய்திகள்