துலாம் - முயற்சிகள் வெற்றியடையும்

Update: 2024-01-22 18:30 GMT

2024 ஜனவரி 23 முதல் ஜனவரி 29-ஆம் தேதி வரையிலான ராசிபலன். கணித்து வழங்குபவர் ஜோதிட இமயம் அபிராமி சேகர்.

புதிய முயற்சிகள் வெற்றியடையும். எதிர்பார்க்கும் செய்திகள் தாமதமாக வந்தாலும் இறுதியாக வெற்றியடையும். நம்பியவர்கள் கை கொடுப்பார்கள். தேடுதல் அதிகமாக இருக்கும். இடம், வீடு, ஊர் மாற நினைப்பவர்களுக்கு அதற்கான சூழ்நிலைகள் இருக்கிறது. விற்பனை ஆகாமல் இருந்த சொத்துக்கள் விற்பனை ஆகும். ஏற்கனவே கைவிட்டுப்போன சொத்துக்களையும் வாங்குவீர்கள். காதல் வெற்றி அடையும். வீட்டில் நீண்ட காலம் சுபகாரியங்கள், சுப நிகழ்ச்சிகள் நடைபெறாமல் இருந்தால் நடக்கும். ஷேர் மார்க்கெட், லாட்டரி, ட்ரேடிங் மற்றும் ஆன்லைன் தொழிலில் இருப்பவர்கள் முதலீடுகள் செய்யலாம். ஏதாவது ஒரு வேலை, வருமானம் இருக்கும். சொந்த தொழில் நன்றாக உள்ளது. திருமண வாழ்க்கை மகிழ்ச்சிகரமாக இருக்கும். விநாயகர் மற்றும் துர்கை வழிபாடு முன்னேற்றத்தை தரும்.

Tags:    

மேலும் செய்திகள்