முயற்சிகள் வேண்டாம்

Update:2024-08-06 00:00 IST

2024 ஆகஸ்ட் 06-ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 12-ஆம் தேதி வரையிலான ராசிபலன். கணித்து வழங்குபவர் ஜோதிட இமயம் அபிராமி சேகர்.

நீங்கள் ஆசைப்பட்டது நடக்கும். உங்களின் எண்ணங்கள், சிந்தனைகள் செயலாக்கம் பெரும். நிலுவையில் உள்ள பணம், முன்னோர்களின் சொத்துக்கள் ஆகியவை வராமல் இருந்தால் வந்து சேரும். மணவாழ்க்கையில் கணவன் - மனைவிக்கிடையில் சின்ன சின்ன கருத்து வேறுபாடுகள், சண்டை, சச்சரவுகள் இருக்கும். வேலையை பொறுத்தவரை பரவாயில்லை. ஆனாலும், குரு, செவ்வாய் 8-ஆம் இடத்தில் இருப்பதால் உங்களோடு பணியாற்றுபவர்களிடம் கொஞ்சம் விட்டு கொடுத்து செல்லுங்கள். தேவையில்லாமல் யாருக்கும் கவுன்டர் கொடுக்காதீர்கள். யார் எது சொன்னாலும் பொறுமையாக கேட்டு வாருங்கள். புதிய முயற்சிகள் எதுவும் வேண்டாம். உங்களை நீங்களே புதுப்பித்துக் கொள்ள முயற்சி செய்யுங்கள். அது பின்னாளில் உங்களுக்கு வெற்றியை கொடுக்கும். உங்கள் காதல் விஷயங்கள் மகிழ்ச்சி, சந்தோஷத்தை கொடுக்கும். அந்த காதல் வெற்றியடைந்து திருமணத்தில் முடியும். ஷேர் மார்க்கெட், டிரேடிங் போன்றவற்றில் முதலீடு செய்ய நினைப்பவர்கள் அவசியம் இருந்தால் மட்டும் செய்யுங்கள். குறிப்பாக இந்த வாரத்தில் லாட்டரி, ரேஸ் போன்றவற்றில் முதலீடு செய்வது வேண்டாம். வேலை பரவாயில்லை. சொந்த தொழில் சுமாராக இருக்க வாய்ப்புள்ளது. கணவன் - மனைவிடையே கருத்து வேறுபாடுகள், சண்டை சச்சரவுகள் இருந்து கொண்டே இருக்கும். வாரம் முழுவதும் முருகனையும், விநாயகரையும் வழிபாடு செய்யுங்கள். 

Tags:    

மேலும் செய்திகள்