துணிந்து செயல்படுங்கள்
2024 ஜூலை 23ஆம் தேதி முதல் ஜூலை 29-ஆம் தேதி வரையிலான ராசிபலன். கணித்து வழங்குபவர் ஜோதிட இமயம் அபிராமி சேகர்.
உங்களின் விருப்பங்கள், எண்ணங்கள், ஆசைகள், அபிலாஷைகள் பூர்த்தியாக வாய்ப்புள்ளது. நீங்கள் நம்பியவர்கள் ஏதோவொரு விதத்தில் உதவி செய்வார்கள். எல்லாவிதமான முயற்சிகளிலும் வெற்றி பெறுவீர்கள். தேவையில்லாத குழப்பங்கள் வேண்டாம். சில விஷயங்களில் துணிந்து செயல்படுங்கள். பொருளாதார ரீதியாக வருமானங்கள், சம்பாத்தியங்கள் இருக்கிறது. அதே அளவுக்கு செலவினங்களும் இருக்கின்றன. உறவுகளால் நற்பலன்கள், பிரச்சினைகள் இரண்டுமே இருக்கிறது. அதேபோன்று இளைய சகோதர - சகோதரிகளால் உங்களுக்கு தேவையில்லாத மன வருத்தங்கள், மனக் குழப்பங்கள், நிம்மதியற்ற சூழ்நிலைகள் உள்ளன. குறிப்பாக தூக்கம் கெடுவதற்கான வாய்ப்புகள் உள்ளன. உற்பத்தி சார்ந்த துறைகளில் இருப்பவர்களுக்கு புரொடக்சனுக்கு தகுந்த விற்பனை மற்றும் வருமானம் இல்லை. அம்மா, அப்பா இருவரின் உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துங்கள். வேலையில் உடன் பணியாற்றுபவர்கள், உயர் அதிகாரிகள் ஆகியோரிடம் கவனமாக இருங்கள். இல்லையென்றால் அவர்கள் ஒத்துழைப்பு தருவதற்கான வாய்ப்புகள் குறைவு. உங்களின் தனிப்பட்ட வாழ்க்கை குறித்து யாரிடமும் பகிர்ந்து கொள்ளாதீர்கள். அவசரம், அவசியம் இருந்தால் தவிர கடன் வாங்காதீர்கள். அந்த கடன் பின்னாளில் கூடுவதற்கான வாய்ப்புகள் உள்ளன. சொந்த தொழில், கூட்டுத் தொழில் இரண்டுமே சுமார். மண வாழ்க்கையில் கணவன், மனைவிக்குள் கருத்து வேறுபாடுகள், சண்டை சச்சரவுகள் இருக்கின்றன. இந்த வாரம் முழுவதும் விநாயகர் மற்றும் பெருமாள் கோயிலில் இருக்கக்கூடிய நரசிம்மரை வழிபாடு செய்யுங்கள்.