குழந்தை பாக்கியம்
2024 ஆகஸ்ட் 20-ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 26-ஆம் தேதி வரையிலான ராசிபலன். கணித்து வழங்குபவர் ஜோதிட இமயம் அபிராமி சேகர்.
எதிர்பாராத மகிழ்ச்சி, சந்தோஷம், டூர், எண்டெர்டெயின்மென்ட் ஆகியவை இருக்கிறது. குடும்பத்தில் சுபகாரியங்கள், சுபநிகழ்ச்சிகள் நடைபெறாமல் இருந்தால் நடக்கும். தெய்வ தரிசனம், ஆலய தரிசனம் அமைவதற்கான வாய்ப்புகள் உள்ளன. பொருளாதார நிலைகளை பொறுத்தவரை கையில் பணம், தனம் இருக்கும். நீண்ட நாட்களாக குழந்தை இல்லாதவர்களுக்கு குழந்தைக்கான வாய்ப்பு, அவர்களால் மகிழ்ச்சி, சந்தோஷம் ஆகியவை உண்டு. குழந்தைக்காக ட்ரீட்மென்ட் எடுத்தாலும் வெற்றிபெறும். இளைய சகோதர - சகோதரிகளுக்கு நன்மை, அவர்களுக்கு வேலை, வருமானம், சம்பாத்தியம் மற்றும் நெருங்கிய உறவுகளால் மகிழ்ச்சி, சந்தோஷம் ஆகிய அத்தனையும் இருக்கிறது. வேலையில் கவனமாக இருக்க வேண்டும். இல்லையென்றால் வேலையை விட்டு வெளியேற்றப்பட வேண்டிய சூழல் ஏற்படும். உற்பத்தி சார்ந்த துறைகளில் விற்பனை இருக்கிறது, லாபம் இல்லை. அரசாங்கம் தொடர்பான விஷயங்களில் கவனமாக இருங்கள். பேச்சின் மூலமாக தேவையற்ற பிரச்சினைகளை சந்திக்க வேண்டியிருக்கும். அதனால் பொறுமையாகவும், நிதானமாகவும் செயல்படுங்கள். உடம்பில் நோய் எதிர்ப்பு சக்தி என்பது குறைவாக இருக்கும். எது எப்படி இருந்தாலும் உங்களின் கௌரவம், அந்தஸ்து, புகழ், செல்வம், செல்வாக்கு, கீர்த்தி காப்பாற்றப்படும். பாஸ்போர்ட், விசாவுக்கு விண்ணப்பித்திருந்தால் அவை வருவத்தில் தடை இருக்கிறது. இந்த வாரம் முழுவதும் சிவனையும், விநாயகரையும் வழிபாடு செய்யுங்கள்.