போட்டித்தேர்வுகளில் வெற்றி

Update:2024-11-26 00:00 IST

2024 நவம்பர் 26-ஆம் தேதி முதல் டிசம்பர் 02-ஆம் தேதி வரையிலான ராசிபலன். கணித்து வழங்குபவர் ஜோதிட இமயம் அபிராமி சேகர்.

பொருளாதார நிலைகள் பரவாயில்லை. கையில் பணம், தனம் இருக்கிறது. பெரிய அளவில் நீங்கள் செய்யும் முயற்சிகள் உங்களுக்கு சாதகமாக இருக்கும். குடும்பத்தில் சுபகாரியங்கள், சுப நிகழ்ச்சிகள் நடைபெறும். நீங்களும் சுப நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள். குழந்தைகளால் மகிழ்ச்சி, சந்தோஷம், நற்பலன்கள் உண்டு. குழந்தைக்காக சிகிச்சை எடுத்தால் வெற்றி பெறுவீர்கள். ஷேர் மார்க்கெட் உள்ளிட்ட யூக வணிகங்கள் அத்தனையுமே பரவாயில்லை. காதல் விஷயங்கள் வெற்றி பெறும். ஜாதி, மதம், மொழிக்கு அப்பாற்பட்ட தொடர்புகள் ஏற்பட வாய்ப்புகள் உள்ளன. நட்பு வட்டாரத்தால் மகிழ்ச்சி, சந்தோஷம், நன்மை உண்டு. மூத்த சகோதர - சகோதரிகளால் நன்மைகள் ஏற்படும். வேலை வாய்ப்புகள் பரவாயில்லை. பணி உயர்வு, சம்பள உயர்வு ஆகியவை இருக்கிறது. போட்டி தேர்வுகள் எழுதியிருந்தால் வெற்றி பெறுவீர்கள். லோனுக்கு விண்ணப்பித்திருந்தால் கிடைக்கும். ஆண் நண்பர்களால் மகிழ்ச்சி சந்தோஷம் இருக்கிறது. இந்த வாரம் முழுவதும், முருகப்பெருமானை வழிபாடு செய்யுங்கள்.

Tags:    

மேலும் செய்திகள்