இடமாற்றம் உண்டாகலாம்
பணியிடத்தில் பேச்சுத்திறனால் வளர்ச்சி ஏற்படும்.
By : ராணி
Update:2023-08-08 00:00 IST
2023, ஆகஸ்ட் 8 முதல் 14- ஆம் தேதி வரையிலான ராசிபலன். கணித்து வழங்குபவர் ஜோதிடர் ஆஞ்சநேயா.
இந்த வாரம் உயர் அதிகாரிகளிடம் உங்கள் திறமைகளை வெளிப்படுத்தும் வாய்ப்பாக அமையும். பணியிடத்தில் பேச்சுத்திறனால் வளர்ச்சி ஏற்படும். இடமாற்றம் உண்டாகலாம். 11-ஆம் தேதி மாலை முதல் 12, 13-ஆம் தேதி வரை சிறிது கடினமாக இருக்கும். தந்தை, தாய்க்கு உடல் உபாதைகள் உண்டாகும். பிறருடைய மருத்துவச் செலவை ஏற்றுக் கொள்வதால் குடும்பத்தினரின் உடல்நலக் குறைபாடுகள் நீங்கும். குழந்தைகள், கணவன் (அ) மனைவி ஆதரவாக இருப்பார்கள்.