குழந்தை பாக்கியம்

Update:2024-07-30 00:00 IST

2024 ஜூலை 30-ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 05-ஆம் தேதி வரையிலான ராசிபலன். கணித்து வழங்குபவர் ஜோதிட இமயம் அபிராமி சேகர்.

உங்களை அறியாத மகிழ்ச்சி, சந்தோஷம், டூர், டிராவல் ஆகியவை இருக்கின்றன. குழந்தைக்காக காத்திருப்பவர்களுக்கு இறையருளால் குழந்தை பாக்கியம் உண்டு. குழந்தைகளால் மகிழ்ச்சி, சந்தோஷம் என்பது இருக்கும். கையில் பணம், தனம் இருந்தால் கூட தாராளமாக செலவு செய்வதற்கான சூழ்நிலைகள் உள்ளன. நோயில் இருந்து விடுபடுவீர்கள். கடன் இருந்தால் குறையும். உங்களின் முயற்சிகள் வெற்றி பெற்றாலும் அது சுமாராகவே இருக்கும். உற்பத்தி சார்ந்த துறைகளில் இருப்பவர்களுக்கு ஓரளவு வருமானம் இருக்கும். விவசாயம் சார்ந்த துறைகளில் இருப்பவர்களுக்கு நல்ல மகசூல் மற்றும் லாபம் இருக்கிறது. கல்வி பரவாயில்லாமல் இருக்கும். ஷேர் மார்க்கெட், டிரேடிங் போன்றவற்றில் முதலீடு செய்ய வேண்டாம். உங்களின் பணம் அல்லது பொருள் முடங்க வாய்ப்புள்ளது. உங்களின் உழைப்பு மற்றவர்களுக்கு லாபம்; உங்களுக்கு பிரயோஜனம் இல்லை. அரசியல் சார்ந்த துறைகளில் இருப்பவர்களுக்கும் நன்றாக இல்லை. விளையாட்டுத்துறையில் இருப்பவர்கள் உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துங்கள். உங்களின் கௌரவம். அந்தஸ்து, புகழ் காப்பாற்றப்படும். புதிய நட்பு வட்டாரம், அதனால் மகிழ்ச்சி, சந்தோஷம் ஆகியவை இருக்கின்றன. இந்த வாரம் முழுவதும் பெருமாளையும், சிவனையும் பிரதானமாக தரிசனம் செய்யுங்கள். 

Tags:    

மேலும் செய்திகள்