குழந்தை பாக்கியம்

Update:2024-07-23 00:00 IST

2024 ஜூலை 23ஆம் தேதி முதல் ஜூலை 29-ஆம் தேதி வரையிலான ராசிபலன். கணித்து வழங்குபவர் ஜோதிட இமயம் அபிராமி சேகர்.

உங்களை அறியாத மகிழ்ச்சி, சந்தோஷம் இருக்கிறது. புதிய காதல் விஷயங்கள் சந்தோஷத்தை கொடுக்கும். ஜாதி, மதம், மொழிக்கு அப்பாற்பட்ட தொடர்புகள் ஏற்படும். பிரிந்த காதல் மீண்டும் சேரும். எந்த வேலையில் இருந்தாலும் உங்கள் பணியில் மிகவும் கவனம் செலுத்துங்கள். இல்லையென்றால் வேலையில் மாற்றங்கள் இருக்கிறது. பொருளாதார நிலைகள் பரவாயில்லை. சொந்த தொழில் நன்றாக உள்ளது. கூட்டுத்தொழிலில் பார்ட்னருக்காக உழைக்க வேண்டியுள்ளது. கலைத்துறையில் இருப்பவர்களுக்கு பாப்புலாரிட்டி, பப்ளிசிட்டி தவிர வருமானங்கள், சம்பாத்தியங்கள் இருக்கின்றன. அரசியல் சார்ந்த துறைகளில் இருப்பவர்கள் உங்கள் எதிரிகளை வெற்றி கொள்வதற்கான வாய்ப்புகள் உள்ளன. குழந்தை இல்லாதவர்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைப்பதற்கான சந்தர்ப்ப சூழ்நிலைகள் உண்டு. தைரியத்துடனும், தன்னம்பிக்கையுடனும் செயல்படுங்கள். யாரிடமும் தேவையில்லாத வார்த்தைகளை விடாதீர்கள். பொறுமையாகவும், நிதானமாகவும் இருந்தால் மிகப்பெரிய மாற்றம். முன்னேற்றம் உண்டாகும். நண்பர்களால் மகிழ்ச்சி, சந்தோஷம், மூத்த சகோதர - சகோதரிகளால் நன்மைகள் ஏற்படும். இந்த வாரம் முழுவதும் சிவன் வழிபாடு மற்றும் பிரம்மாவை தரிசனம் செய்யுங்கள். 

Tags:    

மேலும் செய்திகள்