எதிர்பாராத பயணம்

Update:2024-06-18 00:00 IST

2024 ஜூன் 18-ஆம் தேதி முதல் ஜூன் 24-ஆம் தேதி வரையிலான ராசிபலன். கணித்து வழங்குபவர் ஜோதிட இமயம் அபிராமி சேகர்.

நீங்கள் நினைத்தது அனைத்தும் நடப்பதற்கான வாய்ப்புகள் உள்ளன. தைரியம், தன்னம்பிக்கை இருக்கும். யாரை நம்பியிருக்கிறீர்களோ அவர்கள் ஏதோவொரு ரூபத்தில் உதவி செய்வார்கள். உங்களை நீங்களே பெரிய அளவில் புதுப்பித்துக்கொள்வீர்கள். உங்கள் முயற்சிகளால் நன்மைகள் கிடைக்கும். பொருளாதார நிலைகளை பொறுத்தவரையில் கையில் பணம், தனம் இருக்கும். தேவையில்லாத குழப்பங்கள் நீங்கி எந்தவொரு முடிவுகளையும் தைரியமாக எடுப்பதற்கான காலநிலை நன்றாக உள்ளது. நீண்ட நாட்களாக விற்பனையாகாத சொத்துக்கள் எதிர்பார்த்த விலைக்கு போவதற்கான வாய்ப்புகள் உள்ளன. எதிர்பாராத பயணம், அந்த பயணத்தால் நன்மை, மகிழ்ச்சி, சந்தோஷம் என அனைத்தும் இருக்கிறது. சிறு தொழில், சுயதொழில், வீட்டில் வைத்து பிசினஸ் குறிப்பாக ஆன்லைன் பிசினஸ் போன்றவை சுமாராக இருப்பதால் பெரிய அளவில் முதலீடுகள் ஏதும் செய்ய வேண்டாம். வேலையை பொறுத்தவரை உங்களுக்கு இந்த வாரம் பிரச்சினைகள் இருக்கும். அதனால் கவனமாக இருப்பது நல்லது. சொந்த தொழில், கூட்டுத்தொழில் இரண்டுமே சுமாராகத்தான் உள்ளது. இந்த வாரம் முழுவதும் துர்கை மற்றும் மகா கணபதியை வழிபாடு செய்யுங்கள். 

Tags:    

மேலும் செய்திகள்