முன்னேற்றம் உண்டாகும்

Update:2024-01-09 00:00 IST

2024 ஜனவரி 9 முதல் ஜனவரி 15-ஆம் தேதி வரையிலான ராசிபலன். கணித்து வழங்குபவர் ஜோதிட இமயம் அபிராமி சேகர்.

தெய்வ அனுகூலம் உண்டு. நீண்ட ஸ்தல யாத்திரை அல்லது தெய்வ தரிசனம் அமையும். தொழில் விருத்தியாகும். வேலையில் எதிர்பார்க்கும் முன்னேற்றங்கள் இருக்கும். கம்பெனி மாற நினைப்பவர்கள் மாறலாம். பொருளாதாரம், முயற்சிகள் சுமாராக இருக்கும். எதிர்பார்த்த, எதிர்பாராத செய்திகள் சாதகமாக வரும். எதிர்கால திட்டத்தை நோக்கி பயணித்தால் வெற்றியடைவீர்கள். மூத்த சகோதர, சகோதரிகளால் நன்மை உண்டு. அவர்களுக்காக செலவு செய்வீர்கள். நெருங்கிய நண்பர் ஒருவர் பிரிந்துசெல்ல வாய்ப்பு உள்ளது. காதல் மகிழ்ச்சியை தரும். ஆன்லைன், டிரேடிங்கில் சாதாரணமாக முதலீடு செய்தாலே நல்ல பலன் கிடைக்கும். சிவ ஆலயத்திலுள்ள அம்பாளையும், பெருமாள் ஸ்தலத்திலுள்ள தாயாரையும் வழிபாடு செய்ய முன்னேற்றம் உண்டாகும்.

Tags:    

மேலும் செய்திகள்