வழிபாடு ஏற்றத்தை தரும்
2024 ஜனவரி 2 முதல் ஜனவரி 8-ஆம் தேதி வரையிலான ராசிபலன். கணித்து வழங்குபவர் ஜோதிட இமயம் அபிராமி சேகர்.
வேலையை பொறுத்தவரை எந்த துறையில் பணியாற்றினாலும் அது உங்களுக்கு சிறப்பானதாக இருக்கும். எதிர்பாராத ஆலய தரிசனம் இருக்கும். அப்பாவின் அன்பு, ஆதரவு பரிபூரணமாக கிடைக்கும். நீங்கள் எடுக்கும் முயற்சிகள் வெற்றியை தரும். பொருளாதார நிலையை பொறுத்தவரை உங்களுக்கு வருமானம் வரும். அதே நேரம் செலவினங்களும் ஏற்படும். குழந்தைகளால் மகிழ்ச்சி உண்டாகும். யார் மீதாவது காதல் இருந்தால் அது கைகூடும். கலைத்துறையில் இருப்பவர்களுக்கு சுமாரான முன்னேற்றங்கள் உண்டு. மூத்த சகோதர - சகோதரிகள் மட்டுமின்றி எதிர்பாராத நட்பு வட்டங்களாலும் நன்மை ஏற்படும். கூட்டுத்தொழிலில் கவனமாக இருப்பது நல்லது. துர்க்கை அல்லது காளியுடைய வழிபாடு மேலும் உங்கள் வாழ்க்கையில் ஏற்றத்தை தரும்.