தெய்வானுகூலம் உண்டாகும்
அதிகமான வேலைப்பளுவில் இருக்கும் பெண்கள், குடும்பத்தலைவிகளுக்கு இந்த மாதம் நல்ல மாற்றத்ததைத் தரும். இளைஞர்களுக்கு சமுக ஊடங்களில் திறமைகள் மேம்படும். தெய்வானுகூலம் உண்டாகும்.
By : ராணி
Update:2023-07-11 10:10 IST
மேஷ ராசிக்காரர்களுக்கு ஆடி மாதம் மேன்மை நிலையில் ஆரம்பிக்கிறது. குரு சுக்ரன் இருவரும் ராசிநாதன் செவ்வாயுடன் தொடர்பில் இருப்பதால் தொட்டது துலங்கும். அதிகமான வேலைப்பளுவில் இருக்கும் பெண்கள், குடும்பத்தலைவிகளுக்கு இந்த மாதம் நல்ல மாற்றத்ததைத் தரும். இளைஞர்களுக்கு சமுக ஊடங்களில் திறமைகள் மேம்படும். தெய்வானுகூலம் உண்டாகும். வியாபாரிகளுக்கு இது பொற்காலம். இதுவரை இருந்த நஷ்டங்கள் மாறி திருப்புமுனைகள் உண்டாகும். அக்காள், தங்கை மூலம் இருந்து வந்த உரசல்கள் முடிவுறும்.பாஸ்போர்ட், விசா சிக்கல்கள் விலகும். கிருத்திகை நட்சத்திரக்காரர்களுக்கு வீடு, தொழில் போன்றவற்றில் சிறு மாற்றங்கள் ஏற்படும்.