புதிய காதல் மலரும்

Update:2024-10-15 00:00 IST

2024 அக்டோபர் 15-ஆம் தேதி முதல் அக்டோபர் 21-ஆம் தேதி வரையிலான ராசிபலன். கணித்து வழங்குபவர் ஜோதிட இமயம் அபிராமி சேகர்.

கடந்த காலங்களில் நீங்கள் யோசித்து வைத்திருந்த உங்களின் எண்ணங்கள், சிந்தனைகள் பெரிய அளவில் செயலாக்கம் பெரும். துணிந்து செயல்படுவதற்கான தைரியமும், தன்னம்பிக்கையும் கிடைக்கும். வேலை இருந்தாலும், எப்போதும் அதில் கொஞ்சம் கவனமாக இருங்கள். பெரிய அளவில் ஷேர் மார்க்கெட், டிரேடிங், ஆன்லைன் பிசினஸ் போன்றவற்றில் முதலீடு செய்ய நினைப்பவர்கள் சுமாரான அளவில் முதலீடு செய்யுங்கள்; ஓரளவுக்கு நல்ல ரிட்டன்ஸ் கிடைப்பதற்கான வாய்ப்புகள் உள்ளன. சொந்த தொழில் ஓரளவுக்கு வருமானத்தை கொடுக்கும். கூட்டுத்தொழிலில் பார்ட்னரும், நீங்களும் லாபம் அடைவீர்கள். உங்களின் நட்பு வட்டாரத்தை டெவலப் செய்யுங்கள். உற்பத்தி சார்ந்த துறைகளில் இருப்பவர்களுக்கு புரொடக்சனுக்கு தகுந்த சேல்ஸ் இருக்கிறது. புதிய காதல் மலரும். அந்த காதல் வெற்றியில் முடியும். இந்த வாரம் முழுவதும், மகாலட்சுமி மற்றும் அம்பாளை வழிபாடு செய்யுங்கள்.

Tags:    

மேலும் செய்திகள்