பெண்கள் விஷயத்தில் கவனம்

விபத்துகளை தவிர்க்க கவனமாகவும், நிதானமாகவும் செயல்பட வேண்டும்.

Update:2023-10-03 00:00 IST

2023, அக்டோபர் 3 முதல் அக்டோபர் 9-ஆம் தேதி வரையிலான ராசிபலன். கணித்து வழங்குபவர் ஜோதிடர் ஜோதிட வித்யாபதி எம். ஆர். கருணாகரன்.

பெண்கள் விஷயத்தில் கவனமுடன் இருப்பது நல்லது. வீடு, வாகனம், சிறு முயற்சிகள் போன்றவற்றிலும் கவனம் அவசியம். விபத்துகளை தவிர்க்க கவனமாகவும், நிதானமாகவும் செயல்பட வேண்டும். உடல்நலம் சார்ந்த பிரச்சினைகள் ஏற்படும். 5, 6, 7 ஆகிய தேதிகளில் தெய்வ வழிபாடு, குலதெய்வ வழிபாடு, குழந்தைகளுடன் மகிழ்ச்சியாக நேரத்தை செலவிடுவது போன்றவற்றால் உங்கள் மனம் சாந்தமடையும். இந்த நாட்களில் உடல் மற்றும் மனச்சோர்வுகள் ஏற்படும். அதனால் புதிய முயற்சிகள் மேற்கொள்ளாமல் இருப்பது நல்லது. 8, 9 தேதிகளில் நீங்கள் மேற்கொள்ளும் புதிய முயற்சிகள் வெற்றியை தரும்.

Tags:    

மேலும் செய்திகள்