உடல் ஆரோக்கியத்தில் கவனம்

Update: 2024-04-22 18:30 GMT

2024 ஏப்ரல் 23-ஆம் தேதி முதல் ஏப்ரல் 29-ஆம் தேதி வரையிலான ராசிபலன். கணித்து வழங்குபவர் ஜோதிட இமயம் அபிராமி சேகர்.

பொருளாதார நிலைகள் பரவாயில்லை. உங்களது எண்ணங்கள், சிந்தனைகள் செயலாக்கம் பெறும். நீங்கள் நினைப்பது நடக்கும். வீடு, இடம், ஊர் மாறுவதற்கான வாய்ப்புகள் உள்ளன. புதிய முயற்சிகளில் வெற்றி பெறுவீர்கள். நிறைய படிப்பீர்கள். உங்களை நீங்களே பெரிய அளவில் முன்னெடுத்துச் செல்வதற்கான வாய்ப்புகள் உள்ளன. விற்பனையாகாத சொத்துக்களை விற்பதற்கான வாய்ப்புகள் உள்ளன. அம்மாவின் உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துங்கள். உற்பத்தி சார்ந்த துறைகளில் இருப்பவர்களுக்கு உற்பத்திக்கு தகுந்த விற்பனை இருக்கிறது. ஷேர் மார்க்கெட், டிரேடிங், டிஜிட்டல் கரன்சி, கோல்ட் பாண்ட், கோல்டு காயின் போன்றவற்றில் முதலீடு செய்வதாக இருந்தால் செய்யுங்கள். அதனால் நன்மைகள் ஏற்படும். கணவன் அல்லது மனைவி மூலமாக பண வரவு, பொருள் வரவு இருக்கிறது. எதிர்பாராத தனவரவும் இருந்து கொண்டே இருக்கும். உடலில் சின்ன பிரச்சினை இருந்தாலும் உடனே மருத்துவரை அணுகி ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துங்கள். சொந்த தொழில் மற்றும் கூட்டுத்தொழில் நன்றாக உள்ளது. வேலையை பொறுத்தவரை பிரச்சினைகள் இல்லை. எதிர்பார்த்த பிரமோஷன் கிடைக்கும். இந்த வாரம் முழுவதும் விநாயகர் மற்றும் முருக பெருமானை வழிபாடு செய்வது நல்லது. 

Tags:    

மேலும் செய்திகள்

பண வரவு