கவனமுடன் செயல்படுங்கள்
2024 பிப்ரவரி 27 முதல் மார்ச் 4-ஆம் தேதி வரையிலான ராசிபலன். கணித்து வழங்குபவர் ஜோதிட இமயம் அபிராமி சேகர்.
நீண்ட நாட்களாக தொழில் தொடங்க நினைப்பவர்களுக்கு அதற்கான சூழ்நிலைகள் உள்ளன. ஏற்கனவே தொழில் செய்பவர்களுக்கு, அதனால் நற்பலன்கள் உண்டாகும். புதிதாக காதல் மலரும். ஏற்கனவே காதலித்தால், அந்த காதல் திருமணத்தில் முடியும். வேறு அலுவலகம் மாறுவதற்கான வாய்ப்புகள் இல்லை. கல்வியை பொறுத்தவரை பரவாயில்லை. உற்பத்தி சார்ந்த துறைகளில் இருப்பவர்களுக்கு விற்பனை இருக்கும். லாபம் இருக்காது. வெளிநாடு சென்று உயர்கல்வியை தொடர நினைப்பவர்கள் முயற்சிக்கலாம். ஏதாவது ஒன்றில் முதலீடு செய்ய நினைப்பவர்கள் செய்யலாம். மூத்த சகோதர, சகோதரிகளால் நன்மை ஏற்படும். கலைத்துறையில் இருப்பவர்களுக்கு பாப்புலாரிட்டி, பப்ளிசிட்டி கிடைக்கும். ஆனால் வருமானம் இருக்காது. அரசியல் வாழ்க்கை சுமாராக இருக்கும். கவனமுடன் செயல்படுங்கள். தேவையில்லாமல் கடன் வாங்காதீர்கள். யாருக்கும் கடன் கொடுக்காதீர்கள். விநாயகர் மற்றும் முருகனை வழிபட்டால் நற்பலன்கள் கிடைக்கும்.