முன்னேற்றம் உண்டு

Update: 2024-02-12 18:30 GMT

2024 பிப்ரவரி 13 முதல் பிப்ரவரி 19-ஆம் தேதி வரையிலான ராசிபலன். கணித்து வழங்குபவர் ஜோதிட இமயம் அபிராமி சேகர்.

வீட்டில் இருந்தோ அல்லது ஆன்லைன் மூலமாகவோ சொந்தமாக தொழில் தொடங்க நினைப்பவர்களுக்கு அதற்கான சூழ்நிலைகள் ஏற்படும். வருமானத்திற்கு தகுந்த செலவினங்களும் உண்டாகும். தேவையற்ற செலவினங்கள் ஏற்பட வாய்ப்புள்ளதால் ஏதாவது ஒன்றில் முதலீடுகள் செய்வது நல்லது. அதேநேரம் ஷேர் மார்க்கெட்டில் முதலீடு செய்யும்போது கவனம் அவசியம். கலைத்துறையில் இருப்பவர்களுக்கு பாப்புலாரிட்டி, வருமானம் இருக்கும். அரசியல் சார்ந்த துறைகளில் இருப்பவர்களுக்கு நல்லதொரு ஏற்றம், முன்னேற்றம் உண்டு. எதிரிகளை ஜெயிப்பீர்கள். வேலையில் எந்த பிரச்சினையும் இருக்காது. அதனால் அவசரப்பட்டு வேறு வேலைக்கு மாற வேண்டாம். இந்த வாரம் முழுவதும் விநாயகரை வழிபடுவது நல்ல பலனைத் தரும். மேலும் பெருமாள் கோயிலுக்குச் சென்று கருடாழ்வாரை வணங்கி வருவது இன்னும் சிறப்பைத் தரும்.  

Tags:    

மேலும் செய்திகள்

பண வரவு