துணிந்து செயல்படுங்கள்

Update:2024-09-24 00:00 IST

2024 செப்டம்பர் 24-ஆம் தேதி முதல் செப்டம்பர் 30-ஆம் தேதி வரையிலான ராசிபலன். கணித்து வழங்குபவர் ஜோதிட இமயம் அபிராமி சேகர்.

வேலையை பொறுத்தவரை நன்றாக உள்ளது. உங்களுக்குத்தான் வேலையில் ஒரு சலிப்பான சூழல் உருவாகும். திருப்தியற்ற மனநிலை என்பதும் இருக்கும். அதனால் கிடைத்த வேலையை ரசித்து செய்யுங்கள். பொருளாதார நிலைகளை பொறுத்தவரை கையில் பணம், தனம் இருக்கும். உங்களை அறியாத மகிழ்ச்சி, சந்தோஷம் என்பது ஏதோவொரு விதத்தில் இருக்கும். வேலையில் எப்படி இருந்தாலும், தனிப்பட்ட வாழ்க்கை மிகவும் திருப்திகரமாக இருக்கும். தேவையில்லாத குழப்பங்கள் வேண்டாம். சில விஷயங்களில் துணிந்து செயல்படுங்கள். சிறு தொழில், சுயதொழில், வீட்டில் வைத்து தொழில் குறிப்பாக பிளாட்பார தொழில் செய்பவர்களுக்கு நன்றாக இருக்கும். விவசாயம் மற்றும் உற்பத்தி சார்ந்த துறைகளில் இருப்பவர்களுக்கும் மகசூல், விற்பனை, லாபம் இருக்கிறது. சொந்த தொழில் பரவாயில்லாமல் இருக்கிறது. மணவாழ்க்கை சுமாராக இருக்கும். கணவன் - மனைவிக்கிடையில் அடிக்கடி கருத்து வேறுபாடுகள், சண்டை சச்சரவுகள் ஏற்படும். இந்த வாரத்தில் உங்களின் கௌரவம், அந்தஸ்து, புகழ், செல்வம், செல்வாக்கு, கீர்த்தி ஏதோவொரு விதத்தில் காப்பாற்றப்படும். குழந்தைகளுக்கு நிறைய செலவு செய்வீர்கள்; அவர்களை விட்டு பிரிந்து இருப்பதற்கான காலமாக உள்ளது. யாருக்கும் கடன் கொடுக்காதீர்கள். அவை திரும்பி வர வாய்ப்புகள் இல்லை. வாரம் முழுவதும் முருகர் மற்றும் விநாயகரை வழிபாடு செய்யுங்கள்.

Tags:    

மேலும் செய்திகள்