நண்பர்களால் சகாயம்

Update: 2023-12-18 18:30 GMT

2023, டிசம்பர் 19 முதல் டிசம்பர் 25-ஆம் தேதி வரையிலான ராசிபலன். கணித்து வழங்குபவர் ஜோதிட இமயம் அபிராமி சேகர்.

பொருளாதாரம் நன்றாக இருக்கும். தேவையில்லாத குழப்பங்கள் வேண்டாம். உங்களை அப்டேட் செய்யும் சூழ்நிலைகள் அமையும். எதிர்பாராத பயணத்தால் மகிழ்ச்சி உண்டு. முதலீடு செய்தால் சிறப்பான பலன் கிடைக்கும். பார்ட்னர்ஷிப் பிஸினஸில் இருவரும் லாபமடைவீர்கள். திருமண வாழ்க்கை நன்றாக இருக்கும். புது காதல் மலரும். சகோதர, சகோதரிகள் மற்றும் எதிர்பாராத நட்பு வட்டாரத்தால் நன்மைகள் உண்டு. கவுரவம், அந்தஸ்து, புகழ் காப்பாற்றப்படும். அந்நிய மொழி பேசும் நண்பர்களால் சகாயம் உண்டு. வெளிநாட்டுத் தொடர்புகள் சாதகமாக அமையும். அப்பாவின் அன்பும், ஆதரவும் கிடைக்கும். நரசிம்மர் வழிபாட்டால் ஏற்றம் ஏற்படும். 

Tags:    

மேலும் செய்திகள்

பண வரவு