வழக்குகளில் ஜெயிப்பீர்கள்

Update: 2024-07-08 18:30 GMT

2024 ஜூலை 09-ஆம் தேதி முதல் ஜூலை 15-ஆம் தேதி வரையிலான ராசிபலன். கணித்து வழங்குபவர் ஜோதிட இமயம் அபிராமி சேகர்.

முயற்சிகள் மகிழ்ச்சியை கொடுக்கும். எதிர்பாராத பயணம், அந்த பயணத்தால் மகிழ்ச்சி, சந்தோஷம் இருக்கிறது. விற்பனையாகாத சொத்துக்கள் நல்ல விலைக்கு போகும். கையில் பணம், தனம் என்பது இருக்கும். எல்லா விஷயத்துக்கும் கவலைப்படாதீர்கள். யாரை நம்பி இருக்கிறீர்களோ அவர்கள் உங்களுக்கு உதவி செய்வார்கள். எப்போதெல்லாம் பிரச்சினைகள், போராட்டங்கள், நிம்மதியற்ற சூழ்நிலைகள் இருக்கிறதோ, அப்போதெல்லாம் அதை தீர்ப்பதற்கு யாராவது வருவார்கள். இளைய சகோதர - சகோதரிகளால் மகிழ்ச்சி, சந்தோஷம் இருக்கிறது. குடும்பத்தில் சுப காரியங்கள் நடைபெறாமல் இருந்தால் நடைபெறும். வீடு, இடம், ஊர் மாற நினைப்பவர்களுக்கு அதற்கான வாய்ப்புகள் உள்ளன. வேலையை பொறுத்தவரை நன்றாக உள்ளது. தனித்துவமாக தெரிய வாய்ப்பில்லை. வேலையில் பணி உயர்வு, சம்பள உயர்வு, பணப்பயன் போன்றவை கிடைக்கும். வழக்குகள் இருந்தால் அதில் ஜெயிப்பீர்கள். அரசியல் சார்ந்த துறைகளில் இருப்பவர்களுக்கு அது ஏற்றம் மிகுந்ததாக இருக்கும். கலைத்துறையில் இருப்பவர்களுக்கு பாப்புலாரிட்டி, பப்ளிசிட்டி பெரிய அளவில் இருக்கும். சொந்த தொழில் சுமார். மணவாழ்க்கையை பொறுத்தவரை கணவன் - மனைவி உறவு மகிழ்ச்சிகரமாக இருக்கும். ஒன்றிற்கும் மேற்பட்ட தொழில் செய்பவர்கள் முதலீட்டை பார்த்து செய்யுங்கள். வெளிநாட்டு தொடர்புகள் உங்களுக்கு சாதகமாக இருக்கும். உயர்கல்வி நன்றாக உள்ளது. இந்த வாரம் முழுவதும் ஆஞ்சநேயர் மற்றும் கிருஷ்ணரை வழிபாடு செய்யுங்கள்.  

Tags:    

மேலும் செய்திகள்