வழக்குகளில் ஜெயிப்பீர்கள்

Update: 2024-07-01 18:30 GMT

2024 ஜூலை 02-ஆம் தேதி முதல் ஜூலை 08-ஆம் தேதி வரையிலான ராசிபலன். கணித்து வழங்குபவர் ஜோதிட இமயம் அபிராமி சேகர்.

நீங்கள் எடுக்கும் முயற்சிகள் அனைத்தும் வெற்றியடையும். எதிர்பார்த்து காத்திருக்கும் செய்திகள் உங்களுக்கு சாதகமாக வரும். யாரை நம்பி இருக்கிறீர்களோ அவர்கள் உங்களுக்கு உண்மையாகவும், நேர்மையாகவும் இருப்பார்கள். இளைய சகோதர - சகோதரிகள், உறவினர்கள் ஆகியோர் சின்ன சின்ன பிரச்சினைகள் இருந்தாலும் உங்களுக்கு உண்மையாக இருப்பார்கள். பொருளாதார நிலைகளை பொறுத்தவரை, கையில் பணம், தனம் இருக்கும். பேச்சை குறையுங்கள். பேச்சின் மூலமாகவே உங்களுக்கு தேவையில்லாத பிரச்சினைகள் இருக்கிறது. ஆனாலும் கூட, இந்த வாரம் நல்லதொரு, ஏற்றம் முன்னேற்றத்தை அனுபவிப்பதற்கான வாய்ப்புகள் நிறைய உள்ளன. வேலை இருக்கு. வேலையில் சம்பள உயர்வு, பணி உயர்வு அல்லது வேறு ஏதோ ஒன்றை எதிர்பார்த்தால் அது அனைத்துமே உங்களுக்கு கிடைக்கும். லோனுக்கு விண்ணப்பித்திருந்தால் அது கிடைப்பதற்கான வாய்ப்புகள் உள்ளன. எதிர்பாராத நட்பு வட்டாரங்கள் உங்களுக்கு அமையும். அதனால் நன்மைகள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் உண்டு. வழக்குகள் இருந்தால் ஜெயிப்பீர்கள். சொந்த தொழில் சுமாராக உள்ளது. மணவாழ்க்கையை பொறுத்தவரை, கணவன் - மனைவி உறவில் பிரச்சினை, இருவரில் ஒருவருக்கு பிரிவு, வைத்தியச் செலவுகள் போன்றவை இருக்கின்றன. கலைத்துறையில் இருப்பவர்களுக்கு பாப்புலாரிட்டி, பப்ளிசிட்டி, வருமானங்கள் இருக்கின்றன. அரசியல் சார்ந்த துறைகளில் இருப்பவர்களுக்கும் வெற்றிகள் உண்டு. உங்களின் எதிரிகளை ஜெயிப்பீர்கள். இந்த வாரம் முழுவதும் சனி பகவான் மற்றும் பெருமாள் கோயிலில் இருக்கக்கூடிய நரசிம்மரை வழிபாடு செய்யுங்கள் நன்மை ஏற்படும். 

Tags:    

மேலும் செய்திகள்