புதிய காதல் மலரும்
2025 ஏப்ரல் 29-ஆம் தேதி முதல் 2025 மே 05-ஆம் தேதி வரையிலான ராசிபலன். கணித்து வழங்குபவர் ஜோதிட இமயம் அபிராமி சேகர்.
மகிழ்ச்சி, சந்தோஷம் என்பது பெரிய அளவில் இருக்கிறது. எந்த துறையில் பணியாற்றினாலும் உங்கள் வேலையில் கவனமாக இருங்கள். முயற்சிகள் எடுத்து செய்வது முக்கியம். ஏனென்றால் வேலையை விட்டு வெளியே வர வேண்டும் அல்லது வெளியேற்றப்படுவதற்கான வாய்ப்பு, பயம், பீதி இருக்கிறது. உங்கள் முயற்சிகளுக்கான அங்கீகாரம் கிடைக்காது. எந்தவிதமான மானிட்டரி பெனிஃபிட்ஸையும் எதிர்பார்க்காதீர்கள். நோயில் இருந்து விடுபடுவீர்கள். கடன் குறையும். தொழிலில் பார்த்து முதலீடு செய்யுங்கள். ஏனென்றால் உங்கள் தொழிலில் லாபம் குறைவு. மணவாழ்க்கை மகிழ்ச்சி - சந்தோஷகரமாக இருக்கும். குடும்பத்தில் சுபகாரியங்கள் நடக்கும். புதிய காதல் மலரும். ஏற்கனவே காதலித்தால் உங்கள் காதல் திருமணத்தில் முடியும். திருமணம் சம்பந்தப்பட்ட பேச்சுவார்த்தைகள் நடைபெறும். இந்த வாரம் முழுவதும், துர்க்கை மற்றும் காளியை வழிபாடு செய்யுங்கள்.