தொழில் சுமார்

Update:2024-10-22 00:00 IST

2024 அக்டோபர் 22-ஆம் தேதி முதல் அக்டோபர் 28-ஆம் தேதி வரையிலான ராசிபலன். கணித்து வழங்குபவர் ஜோதிட இமயம் அபிராமி சேகர்.

பொருளாதார நிலைகள் பரவாயில்லை. வருமானங்கள் இருக்கிறது. நம் கண் முன்பே பணம், பொருள் பறிபோகும் மாதிரியான காலம் என்பதால் பொறுமையாகவும், கவனமாகவும் இருங்கள். யாருக்கும் பணம் கடன் கொடுக்காதீர்கள். நீங்கள் என்னும் எண்ணங்கள், செயல்படுத்தக் கூடிய விஷயங்கள் சுமாராக இருப்பதால் பெரிய முயற்சிகள் எதுவும் வேண்டாம். சொத்துக்கள் எதிர்பார்த்த விலைக்கு போவதற்கான வாய்ப்புகள் இல்லை. அம்மாவின் அன்பு, ஆதரவு கிடைப்பதிலும் சுமார்தான். அம்மாவின் உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துங்கள். கல்வியில் கவனம் செலுத்துங்கள். பெரிய அளவில் ஷேர் மார்க்கெட்டில் முதலீடு செய்வது, டிரேடிங், லாட்டரி டிக்கெட் வாங்குவதையெல்லாம் விட்டுவிடுங்கள். எல்லாமே லாபம் வருவது மாதிரியான ஒரு தோற்றத்தை தரும். ஆனால், லாபம் இல்லை. சொந்த தொழிலும் சுமார். கூட்டுத்தொழிலில் பார்ட்னர் லாபம் அடைவார்; அல்லது அவருக்காக நீங்கள் உழைக்க வேண்டி வரும். வேலையை பொறுத்தவரை நன்றாக உள்ளது. வேலையில் எதிர்பார்த்த முன்னேற்றம் கிடைப்பதற்கான வாய்ப்பு இருந்துகொண்டே இருக்கிறது. வேறு அலுவலகம் மாற நினைப்பவர்கள் உங்களின் தனிப்பட்ட ஜாதகம் நன்றாக இருக்கும் பட்சத்தில் மாறலாம். மூத்த சகோதர - சகோதரிகளால் மகிழ்ச்சி, சந்தோஷம் இருக்கிறது. யாருக்கும் பெரிதாக கடன் கொடுக்காதீர்கள். எதிர்பாராத தெய்வ தரிசனம், ஆலய தரிசனம் அமையும். இறையருளால் நற்பலன்கள் ஏற்பட வாய்ப்புள்ளது. இந்த வாரம் முழுவதும், உங்களின் இஷ்ட தெய்வம், குலதெய்வம் ஆகியோரை வழிபாடு செய்யுங்கள்.

Tags:    

மேலும் செய்திகள்