நினைத்த காரியம் கைகூடும்

Update:2024-10-15 00:00 IST

2024 அக்டோபர் 15-ஆம் தேதி முதல் அக்டோபர் 21-ஆம் தேதி வரையிலான ராசிபலன். கணித்து வழங்குபவர் ஜோதிட இமயம் அபிராமி சேகர்.

பொருளாதார ரீதியாக பிரச்சினைகள் இல்லை. புதிய முயற்சிகளில் தெய்வ அனுகூலம் கிடைக்கும். நீங்கள் நினைப்பது நடப்பதற்கான வாய்ப்புகள் நிறைய இருக்கிறது. பகுதி நேரமாகவோ, கரசிலோ, ஆன்லைனிலோ படிப்பீர்கள். கடந்த காலங்களில் நீங்கள் நினைத்த காரியங்கள் கைகூடும். வாழ்க்கையில் எப்போதெல்லாம் போராட்டம், பிரச்சினைகள், நிம்மதியற்ற சூழல்கள் ஏற்படுகிறதோ அப்போதெல்லாம் அதை தீர்ப்பதற்கு யாராவது வருவார்கள். நம்பியவர்கள் உதவி செய்வார்கள். எதிர்பாராத பயணம்; அந்த பயணத்தால் மகிழ்ச்சி, சந்தோஷம் இருக்கிறது. இடம், வீடு, ஊர் மாற நினைத்தவர்களுக்கு அதற்கான சந்தர்ப்ப, சூழ்நிலைகள் ஏற்படும். பழைய பொருட்களை கொடுத்து, புதிய பொருட்களை வாங்குவதற்கான வாய்ப்பு உள்ளது. வேலையை பொறுத்தவரை பரவாயில்லை. செய்யும் வேலையை திருப்தியோடு செய்யுங்கள். தனிப்பட்ட வாழ்க்கை குறித்து யாரிடமும் பகிர்ந்து கொள்ளாதீர்கள். அவசரம் , அவசியம் இருந்தால் தவிர கடன் வாங்காதீர்கள். அப்பா, அம்மா இருவரின் உடல் ஆரோக்கியத்திலும் கவனம் செலுத்துங்கள். கல்வி நன்றாக உள்ளது. வேறு அலுவலகம் மாற நினைப்பவர்கள் மாறலாம். தெய்வ அனுகூலம் இருப்பதால் உங்கள் இஷ்ட தெய்வத்தை பிரதானமாக வழிபாடு செய்யுங்கள். அதுமட்டுமில்லாமல் சனி பகவானையும், ஆஞ்சநேயரையும் வழிபாடு செய்யுங்கள்.  

Tags:    

மேலும் செய்திகள்