வேலையில் விழிப்புடன் இருங்கள்
யாரேனும் விளையாட்டாக பேசுவதாக நினைத்து உங்கள் மனதை காயப்படுத்தினாலும் அமைதியாக செல்வது நல்லது.
By : ராணி
Update:2023-07-18 12:17 IST
2023, ஜூலை 17 முதல் 24 தேதி வரையிலான ராசிபலன்கள். கணித்து வழங்குபவர் ஜோதிடர் ஆஞ்சநேயா.
21,22 மற்றும் 23 ஆகிய மூன்று நாட்களும் சற்று கடினமாக இருக்கும். இந்த வாரம் சற்று மோசமாகவே இருக்கும். வேலையில் நல்ல சூழல் அமைந்தாலும், பேச்சு வார்த்தைகளால் பிரச்சனை ஏற்படும். பிறரை புண்படுத்தும் விதமாக பேசும் தருணங்கள் அமையும் என்பதால் ஜாக்கிரதையாக பேச வேண்டும். யாரேனும் விளையாட்டாக பேசுவதாக நினைத்து உங்கள் மனதை காயப்படுத்தினாலும் அமைதியாக செல்வது நல்லது. ‘சாந்தி’ மந்திரத்தை சொல்லிக்கொண்டே இருந்தால் மனம் அமைதியாக இருக்கும். வேலை ரீதியாக டென்ஷன் வரலாம். அதனால் பிரச்சனைகள் வரலாம். எனவே ஜாக்கிரதையாக செயல்களில் ஈடுபடுவது நல்லது.