கவனம் அவசியம்

Update: 2024-02-12 18:30 GMT

2024 பிப்ரவரி 13 முதல் பிப்ரவரி 19-ஆம் தேதி வரையிலான ராசிபலன். கணித்து வழங்குபவர் ஜோதிட இமயம் அபிராமி சேகர்.

உங்கள் பொருளாதார நிலைகள் பரவாயில்லை. இடம், வீடு, வீட்டு உபயோகப் பொருட்கள் வாங்குவதற்கான சூழல் அதிகமாக உள்ளது. விவசாயம் மற்றும் உற்பத்தி சார்ந்த துறையில் இருப்பவர்களுக்கு நல்ல மகசூல், வருமானம் கிடைக்கும். புதிய காதல் கை கூடும். ஏற்கனவே காதல் பிரேக் அப் ஏற்பட்டிருந்தால் மீண்டும் சேர வாய்ப்புள்ளது. வேலையை பற்றிய ஒரு பயம் இருந்து கொண்டே இருக்கும். அதற்காக கவலைப்பட வேண்டாம். தொழில் தகராறு, தொழில் நிச்சயமற்ற தன்மை ஏற்படும். வெளிநாட்டு தொடர்புகள் சுமாராக இருக்கும். அப்பாவின் அன்பு, ஆதரவு முழுமையாக கிடைக்கும். எதிர்பாராத தெய்வ தரிசனம் அமையும். புதிய முயற்சி மற்றும் எதிர்பார்த்த செய்திகளில் தடைகள் இருப்பதால் கவனமாக இருப்பது நல்லது. விநாயகர் வழிபாடு, ஆஞ்சநேயர் தரிசனம் ஏற்றத்தை தரும். 

Tags:    

மேலும் செய்திகள்