எதிர்பாராத மாற்றம் உண்டு
2025 ஏப்ரல் 29-ஆம் தேதி முதல் 2025 மே 05-ஆம் தேதி வரையிலான ராசிபலன். கணித்து வழங்குபவர் ஜோதிட இமயம் அபிராமி சேகர்.
வேலை, வாய்ப்புகள் நன்றாக உள்ளது. உங்கள் முயற்சி ஸ்தானத்தில் 4 கிரகங்கள் இருப்பதால் கண்டிப்பாக முயற்சி எடுங்கள் வெற்றி பெறுவீர்கள். எந்தவொரு விஷயத்தையும் நாளைக்கு என்று தள்ளி வைக்காமல் உடனே செய்யுங்கள். உங்கள் வாழ்க்கையில் எதிர்பாராத மாற்றங்கள், திருப்பங்கள், முன்னேற்றங்கள் இருக்கிறது. நீங்கள் நம்பியவர்கள் ஏதோவொரு விதத்தில் உதவி செய்வார்கள். இறைவனுடைய அனுகிரகம், அனுகூலம் உங்களுக்கு பரிபூரணமாக இருக்கிறது. அந்த வாய்ப்பையும், சந்தர்ப்பத்தையும் பயன்படுத்திக்கொள்ளுங்கள். குடும்பத்தில் சுபகாரியங்கள், சுப நிகழ்ச்சிகள் நடைபெறும். சிறு தொழில், சுயதொழில், வீட்டில் வைத்து தொழில், ஆன்லைன் பிசினஸ் செய்பவர்களுக்கு உங்கள் துறைகளில் வருமானங்கள் இருக்கிறது. ஊர், இடம் மாற்றங்கள் உண்டு. எதிர்பாராத பயணம், அந்த பயணத்தால் செலவினங்கள், மகிழ்ச்சி, சந்தோஷம் இவை அத்தனையும் இருக்கிறது. சொத்துக்கள் விற்பனையாக வாய்ப்புள்ளது. போட்டித் தேர்வுகள், நேர்முகத் தேர்வுகளில் கலந்து கொண்டிருந்தால் வெற்றி பெறுவீர்கள். எதிரிகளை வெற்றி கொள்வீர்கள். நல்ல வேலையாட்கள் அமைவார்கள். இந்த வாரம் முழுவதும், பைரவர் மற்றும் ஆஞ்சநேயரை வழிபாடு செய்யுங்கள்.