அநாவசிய சிந்தனைகளைத் தவிர்க்கவும்
துணைவருக்கு உடல் நலக் குறைபாடுகள் ஏற்படலாம்.
By : ராணி
Update:2023-08-08 00:00 IST
2023, ஆகஸ்ட் 8 முதல் 14- ஆம் தேதி வரையிலான ராசிபலன். கணித்து வழங்குபவர் ஜோதிடர் ஆஞ்சநேயா.
வீட்டில் பழைய பொருட்களை தூக்கி எறிவதோடு மோசமான நிலையிலானப் பொருட்களை புதிதாக மாற்றினால் வளர்ச்சி உண்டாகும். துணைவருக்கு உடல் நலக் குறைபாடுகள் ஏற்படலாம். சனி பகவானுக்கு விளக்கேற்றவும். ராகுவும் குருவும் பத்தாம் வீட்டில் இருப்பதால் வேலை மற்றும் வாழ்க்கை சம்பந்தமான முக்கிய முடிவுகளை எடுக்க வேண்டாம். அநாவசிய சிந்தனைகளைத் தவிர்க்கவும். கணவன்-மனைவி இடையே உறவு மேம்படும். 11-ஆம் தேதி மாலை முதல் 12, 13-ஆம் தேதி வரை மூன்று நாட்கள் எச்சரிக்கையாக இருக்கவும்.