முயற்சிகள் வெற்றியடையும்
2024 ஜனவரி 2 முதல் ஜனவரி 8-ஆம் தேதி வரையிலான ராசிபலன். கணித்து வழங்குபவர் ஜோதிட இமயம் அபிராமி சேகர்.
தனித்துவமாக செயல்படாவிட்டாலும், இந்த வாரம் ஏதோ ஒரு வேலை மற்றும் வருமானம் உங்களுக்கு நிச்சயம் உண்டு. முயற்சிகள் வெற்றியடையும். நீங்கள் என்னவாக வேண்டும் என்று நினைக்கிறீர்களோ அதற்கான முயற்சியை 2024 தொடக்கத்திலேயே மேற்கொள்வது சிறந்தது. நீங்கள் இந்த வாரத்தில் எடுத்துவைக்கும் ஓவ்வொரு அடியும் உங்களுக்கு வெற்றிப்படிக்கட்டுகளாக அமையும். நீங்கள் நம்பியவர்கள் உங்களை கைவிட மாட்டார்கள். விடுபட்ட நட்புகளை தொடர்வீர்கள். வங்கிக்கடனுக்கு முயற்சித்திருந்தால் கண்டிப்பாக கிடைக்கும். ஏதேனும் போட்டித் தேர்வுகள் எழுதியிருந்தால் வெற்றி பெறுவீர்கள். எதிரிகளை ஜெயிப்பீர்கள். நல்ல வேலையாட்கள் அமைவார்கள். அலுவலக மாற்றம் வேண்டுவோர் முயற்சிக்கலாம். உயர்கல்வியை தொடர முயற்சிப்பவர்கள் துணிந்து செயல்படலாம். சொந்தமாக தொழில் தொடங்க நினைப்பவர்களுக்கு நல்ல ஏற்றம் உண்டாகும். விருதுகள் தேடி வரும். பெருமாள் வழிபாடு சிறந்தது.