யோசித்து செயல்படுங்கள்
2025 ஏப்ரல் 29-ஆம் தேதி முதல் 2025 மே 05-ஆம் தேதி வரையிலான ராசிபலன். கணித்து வழங்குபவர் ஜோதிட இமயம் அபிராமி சேகர்.
வாய்ப்புகள் இருந்தால் முதலீடு செய்யுங்கள். இல்லையென்றால் தேவையில்லாத செலவுகள், விரயங்கள், நஷ்டங்கள், வைத்தியச் செலவுகள் ஏற்படும். வருமானங்கள் நிறைய இருக்கிறது. அதற்கேற்ற செலவுகளும் இருக்கிறது. இந்த வாரமும் அவசரம் இல்லாமல் எந்தவொரு காரியத்தையும் பொறுமையாகவும், நிதானமாகவும் செய்யுங்கள். உங்கள் முயற்சிகள் வெற்றியடைவதில் நிறைய தடைகள் இருக்கிறது. அதனால் நன்கு யோசித்து செயல்படுங்கள். கலைத்துறையில் இருப்பவர்களுக்கு புகழ், அந்தஸ்து இருக்கிறது. வருமானங்கள் இல்லை. யூக வணிகங்களில் முதலீடு செய்யும் பொழுது யோசித்து செய்யுங்கள். வேலையில் நிறைய பிரச்சினைகள் இருக்கிறது. வேலையில் மாற்றம் செய்ய நினைப்பவர்கள் செய்துகொள்ளலாம். தொழில் சுமாராக இருக்கிறது. திருமணத்திற்கான வாய்ப்பு, சந்தர்ப்பங்கள் இருக்கிறது. இந்த வாரம் முழுவதும், சனிபகவான் மற்றும் ஆஞ்சநேயரை வழிபாடு செய்யுங்கள்.