கும்பம் - சொத்துக்கள் விற்பனையாகும்

Update: 2024-01-29 18:30 GMT

2024 ஜனவரி 30 முதல் பிப்ரவரி 5-ஆம் தேதி வரையிலான ராசிபலன். கணித்து வழங்குபவர் ஜோதிட இமயம் அபிராமி சேகர்.

வருமானங்கள் பரவாயில்லை. ஏதோ ஒரு வகையில், தேவையில்லாத செலவினங்கள் ஏற்படும் காலம். தேவை இருந்தால் பயணம் செய்யலாம். சொத்துக்கள் விற்பனையாகும். வீடு, இடம், ஊர் மாற நினைப்பவர்களுக்கு அதற்கான சூழ்நிலைகள், வாய்ப்புகள் அமையும். சிறு தொழில், ஆன்லைன் பிஸினஸ் ஆகியவை சுமாராக இருக்கும். கல்வி நன்றாக உள்ளது. அம்மாவின் அன்பு, ஆதரவு கிடைக்கும். புதிய காதல் மலரும். தேவையில்லாத மனக் குழப்பங்கள் வேண்டாம். வேலையில் பிரச்சினைகள் இருந்தால் கவலைப்பட வேண்டாம். சிவ தரிசனம் முக்கியம். விநாயகர் வழிபாடு நன்மையை தரும். 

Tags:    

மேலும் செய்திகள்

பண வரவு