அப்பாவால் நன்மை

Update: 2024-04-01 18:30 GMT

2024 ஏப்ரல் 2-ஆம் தேதி முதல் ஏப்ரல் 8-ஆம் தேதி வரையிலான ராசிபலன். கணித்து வழங்குபவர் ஜோதிட இமயம் அபிராமி சேகர்.

இந்த வாரம் பேச்சை குறையுங்கள். தேவையில்லாமல் யாரிடமும் பேசாதீர்கள். நேரத்திற்கு சாப்பிடுங்கள். மற்றவர் பேசுவதை பொறுமையாக கேட்டுக்கொள்ளுங்கள். பதிலுக்கு எதுவும் பேசாதீர்கள். உங்கள் முயற்சிகள் அனைத்தும் வெற்றி பெறுவதற்கான வாய்ப்புகள் உள்ளன. நம்பியவர்கள் ஏதோ ஒரு வகையில் உங்களுக்கு உதவி செய்வார்கள். உங்களது இளைய சகோதர - சகோதரிகள் மற்றும் நெருங்கிய உறவினர்களுக்காக நிறைய செலவு செய்வீர்கள். உற்பத்தி சார்ந்த துறைகளில் இருப்பவர்களுக்கு புரொடக்சனுக்கு தகுந்த விற்பனை மற்றும் லாபம் இருக்கும். மோட்டார், சிவில், மெக்கானிக்கல், ஆட்டோமொபைல் போன்ற துறைகளில் இருப்பவர்களுக்கு நல்லதொரு லாபம், வருமானம் இருக்கிறது. கலைத்துறையில் இருப்பவர்களுக்கு நல்லதொரு ஏற்றம், முன்னேற்றம், பாப்புலாரிட்டி, வருமானம் அனைத்தும் கிடைக்கும். அப்பாவால் நன்மைகள் ஏற்படும். உங்கள் கௌரவம், புகழ், அந்தஸ்து காப்பாற்றப்படும். பெரிய அளவில் நட்பு வட்டாரம் உண்டாகும். அவர்களால் நற்பலன்கள் ஏற்படும். இந்த வாரம் முழுவதும் மகாலட்சுமி மற்றும் பைரவரை வழிபாடு செய்வது ஏற்றத்தை தரும்.

Tags:    

மேலும் செய்திகள்

பண வரவு