வேலையில் டென்ஷன்

Update:2024-06-18 00:00 IST

2024 ஜூன் 18-ஆம் தேதி முதல் ஜூன் 24-ஆம் தேதி வரையிலான ராசிபலன். கணித்து வழங்குபவர் ஜோதிட இமயம் அபிராமி சேகர்.

பொருளாதார நிலைகள் சுமாராக உள்ளது. கிரக நிலைகள் சரியில்லாததால் அனைத்திலும் கவனமாக இருங்கள். வேலையை பொறுத்தவரை உடன் பணியாற்றுபவர்களிடம் கவனம் தேவை. அவர்களால் உங்களுக்கு பிரச்சினைகள், போராட்டங்கள் உண்டு. எந்த துறையில் பணியாற்றுபவராக இருந்தாலும் உங்களின் உயர் அதிகாரிகளால் வேலையில் டென்ஷன், மனஅழுத்தம், பணிச்சுமை, மெண்டல் டார்ச்சர் ஆகியவை இருக்கும். தேவையில்லமல் யாரிடமும் கடன் வாங்காதீர்கள். பிறகு அந்த கடனை அடைக்க முடியாமல் நிறைய வட்டி கட்ட வேண்டிய சூழல் ஏற்படும். பொறுமையாகவும், நிதானமாகவும் செயல்படுங்கள். எல்லாவிதமான உறவுகளுடனும் நட்புகளை பலப்படுத்துங்கள். உங்களின் இளைய சகோதர - சகோதரிகளுக்கு சுபகாரியங்கள் நடக்கும். உற்பத்தி சார்ந்த துறைகளில் இருப்பவர்களுக்கு உற்பத்திக்கு தகுந்த விற்பனை இருக்கிறது, லாபம் இல்லை. விவசாயம் சார்ந்த துறைகளில் இருப்பவர்களுக்கும் இதே நிலைதான். புதிய காதல் மலர வாய்ப்புகள் இல்லை. பிரேக் அப் ஏற்பட வாய்ப்புள்ளது. ஷேர் மார்க்கெட், டிரேடிங், மியூச்சுவல் பண்ட், ரேஸ், லாட்டரி போன்ற எதிலும் முதலீடு செய்ய வேண்டாம். கொஞ்சம் அடக்கிவாசியுங்கள். எல்லாவற்றிலும் லாபம் வருவது மாதிரியான தோற்றம் இருக்கும். ஆனால், லாபம் இல்லை. உங்களின் உணர்வுகளை தூண்ட வாய்ப்புள்ளதால் உணர்ச்சிவசப்படாமல் நிதானமாக செயல்படுங்கள். இந்த வாரம் முழுவதும் மகாலட்சுமி மற்றும் சிவன் கோயிலில் இருக்கக்கூடிய அம்பாளை வழிபாடு செய்யுங்கள்.      

Tags:    

மேலும் செய்திகள்