பேச்சை குறையுங்கள்
By : ராணி
Update: 2024-01-08 18:30 GMT
2024 ஜனவரி 9 முதல் ஜனவரி 15-ஆம் தேதி வரையிலான ராசிபலன். கணித்து வழங்குபவர் ஜோதிட இமயம் அபிராமி சேகர்.
வருமானம் நன்றாக இருக்கும். பேச்சின்மூலம் தேவையில்லாத பிரச்சினைகள் வரும். எனவே பேச்சை குறையுங்கள். முயற்சிகளுக்கு ஆரம்பத்தில் தடை ஏற்பட்டாலும் இறுதியில் வெற்றிதான். பழைய பொருட்களுக்கு பதிலாக புதிய பொருட்களை வாங்குவீர்கள். உற்பத்தி, விவசாயத்தில் முன்னேற்றம் உண்டு. சிறு தொழில், சுய தொழிலில் ஏற்றம் உண்டு. கலைத்துறையில் புகழ் கிடைக்கும். வேலையில் உயர்வு கிடைக்கும். புது வேலைக்கு முயற்சிப்பவர்களுக்கு சாதகமான காலம். பாஸ்போர்ட் மற்றும் விசாவுக்கு எதிர்பார்த்து காத்திருப்பவர்களுக்கு அது கிடைக்கும். உயர் கல்வியை தொடரலாம். இஷ்ட தெய்வம் மற்றும் துர்கை வழிபாட்டால் முன்னேற்றம் அமையும்.