எதிர்பாராத பயணம்

Update:2024-01-16 00:00 IST


2024 ஜனவரி 16 முதல் ஜனவரி 22-ஆம் தேதி வரையிலான ராசிபலன். கணித்து வழங்குபவர் ஜோதிட இமயம் அபிராமி சேகர்.

பேச்சின் மூலம் வருமானம் பார்ப்பவர்களுக்கு ஏற்ற காலம். பணம், தனம் வரவுகள் உள்ளன. முயற்சிகள் வெற்றியடையும். நினைத்த காரியங்கள் கைகூடும். நம்பியவர்கள் கைவிட மாட்டார்கள். அவர்களால் நற்பலன்கள் உண்டு. எதிர்பாராத பயணம் மகிழ்ச்சி, சந்தோஷத்தை கொடுக்கும். உறவுகளால் நற்பலன்கள் உண்டு. படிப்பதற்கான சூழல் நிறைய உள்ளது. தொழில் மற்றும் உற்பத்தி ஆகிய துறைகளில் இருப்பவர்களுக்கும் விவசாயம் சார்ந்த துறைகளில் இருப்பவர்களுக்கும் நல்ல வருமானம், லாபம் உண்டு. உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. சுபகாரியங்கள் நடக்கும். முதலீடு செய்ய நினைப்பவர்களுக்கு ஓரளவு பரவாயில்லை. சொந்த தொழில் நன்றாக இருக்கும். வேலை மற்றும் வருமானத்திற்கு பிரச்சினை இருக்காது. சிவ ஸ்தலத்தில் இருக்கக்கூடிய பிரம்மா மற்றும் பைரவருடைய வழிபாடு நற்பலன்களை கொடுக்கும். 

Tags:    

மேலும் செய்திகள்