எதிர்பாராத பயணம்

Update:2024-09-24 00:00 IST

2024 செப்டம்பர் 24-ஆம் தேதி முதல் செப்டம்பர் 30-ஆம் தேதி வரையிலான ராசிபலன். கணித்து வழங்குபவர் ஜோதிட இமயம் அபிராமி சேகர்.

உங்களுடைய கல்வி நன்றாக உள்ளது. வேலையில் மாற்றத்தை எதிர்பார்ப்பவர்கள் அதற்கான முயற்சிகளை செய்யுங்கள். தொழிலை பொறுத்தவரை சுமாராகத்தான் உள்ளது. தொழில் தகராறு; தொழில் நிச்சயமற்றதன்மை இருக்கிறது. அதே சமயம் தொழிலும் விட்டுவிட்டு நடக்கும். அம்மாவின் அன்பு, ஆதரவு கிடைப்பதில் நிறைய தடைகள் இருக்கின்றன. அம்மாவின் உடல் ஆரோக்கியத்திலும் பெரிய அளவில் கவனம் செலுத்துங்கள். கிரக நிலைகள் சாதகமாக இருப்பதால் வெளியூர் செல்ல நினைப்பவர்கள் முயற்சி செய்யுங்கள். புதிய சூழல்கள், புதிய இடங்களில் வாழ்க்கை நடத்த வேண்டிய காலங்கள் இருக்கின்றன. விற்பனையாகாத சொத்துக்கள் நல்ல விலைக்கு போகும். அதனால் நன்மைகள் ஏற்பட வாய்ப்புள்ளது. உற்பத்தி சார்ந்த துறைகளில் இருப்பவர்களுக்கு, உற்பத்திக்கு தகுந்த சேல்ஸ் மற்றும் லாபம் இருக்கிறது. கிரக நிலைகள் சாதகமாக இல்லாததால், விட்டதை பிடிக்க ஆசைப்பட்டு பெரிய அளவில் ஷேர் மார்க்கெட், டிரேடிங், ஆன்லைன் பிசினஸ் போன்றவற்றில் முதலீடு செய்ய நினைப்பவர்கள் செய்யாதீர்கள். கொஞ்சம் பொறுமையாகவும், நிதானமாகவும் செயல்படுங்கள். எதிர்பாராத பயணம்; அந்த பயணத்தால் நன்மை; இன்னொருபக்கம் தடை ஆகியவையும் இருக்கின்றன. இந்த வாரம் முழுவதும் பைரவர் மற்றும் பெருமாள் கோயிலில் இருக்கக்கூடிய கருடாழ்வாரை வழிபாடு செய்யுங்கள்.      

Tags:    

மேலும் செய்திகள்