பயணத்தை தவிர்க்கவும்
2024 ஜனவரி 2 முதல் ஜனவரி 8-ஆம் தேதி வரையிலான ராசிபலன். கணித்து வழங்குபவர் ஜோதிட இமயம் அபிராமி சேகர்.
ஆடை, ஆபரணங்கள் வாங்குவதற்கான வாய்ப்புகள் அதிகம். உயர்கல்வியை தொடரலாம். அப்பாவின் அன்பு, ஆதரவு கிடைக்கும். அரசு சார்ந்த முயற்சிகள் உங்களுக்கு சாதகமாக அமையும். தேவையில்லாத பயணத்தை தவிர்ப்பது நல்லது. உறவுகளால் மன வருத்தங்கள் உண்டாகும். புதிய முயற்சிகள் ஏதும் செய்ய வேண்டாம். உற்பத்தி சார்ந்த துறைகளில் இருப்பவர்களுக்கு நல்ல விற்பனை உண்டாகும். கல்வி சிறப்பாக உள்ளது. அதிலும் கெமிக்கல், ஆட்டோ மொபைல் சார்ந்த துறைகளில் இருப்பவர்களுக்கு ஏற்றம், முன்னேற்றம் நன்றாகவே உள்ளது. ஒன்றிற்கும் மேற்பட்ட தொழில் செய்பவர்களுக்கு சிறப்பான தருணம். வேலை பற்றிய பயம் வேண்டாம். உங்களது கிரக நிலைகள் எதிர்பார்த்த வருமானத்தை கொடுக்கும். தேவையற்ற செலவினங்களும் உண்டாகும். கடன் வாங்குவதை தவிர்ப்பது நல்லது. உடல் ஆரோக்கியத்தில் கவனம் அவசியம். பெருமாள் கோவில்களில் நரசிம்மர் மற்றும் ஆஞ்சநேயரை வழிபடுவது சிறந்தது.