பொ.பாலாஜிகணேஷ்|சிதம்பரம்
10 Aug 2023 3:33 PM GMT
எதிரிகள் பயம் நீக்கும் எளிய பரிகாரம்

எதிரிகள் பயம் நீக்கும் எளிய பரிகாரம் ############################# நிம்மதி தான் வாழ்க்கையில் மிக மிக முக்கியம். எந்த எதிரி, எப்போது எதை செய்வானோ என்று எப்போதுமே பயந்து கொண்டு இருந்தால், வாழ்க்கையில் நிம்மதியாக வாழ முடியாது. கண்ணுக்குத் தெரிந்த எதிரியாக இருந்தால் அவனை எதிர்த்து போராடி வீழ்த்த வேண்டும். கண்ணுக்குத் தெரியாத எதிரிகளை சமாளிப்பது ரொம்ப ரொம்ப கஷ்டம். முன்னால் நின்று சண்டை போடுபவனை விட, பின்னால் நின்று முதுகில் குத்துபவனுக்கு தான் பலம் அதிகமாக இருக்கும். இப்படிப்பட்ட எதிரிகளைக் கண்டு உங்களுக்கு அச்சம் இருக்கிறதா. எந்த ஒரு பயமும் இனி தேவையில்லை. இந்த பரிகாரத்தை செய்தால் எதிரிகள் உங்கள் பக்கம் தலை வைத்து படுக்க மாட்டார்கள். அப்படியே எதிரிகள் உங்கள் வாழ்க்கையில் குறுக்கே வந்தால் கூட அவர்களை எப்படி மடக்க வேண்டும் என்ற சூட்சமத்தை இந்த பிரபஞ்சம் உங்களுக்கு கற்றுக் கொடுத்து விடும். எதிரிகளை சமாளிக்க போகும் அப்படிப்பட்ட பரிகாரம் என்னவாக இருக்கும். தெரிந்து கொள்ள உங்களுக்கும் ஆர்வமாக உள்ளதா. வாங்க பதிவை படித்து தெரிந்து கொள்வோம். எதிரிகளை துவம்சம் செய்யும் வெண்கடுகு: வெண்கடுகு நம்மில் எல்லோருக்கும் தெரியும். நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும். அதை 100 கிராம் அளவு வாங்கினால் கூட போதும். வாங்கி அதை ஒரு கண்ணாடி பாட்டிலில் கொட்டிக் கொள்ளுங்கள். ஒரு வெள்ளை பேப்பரை எடுத்து உங்களுடைய எதிரியின் பெயரை எழுதி, இந்த எதிரி இனி என் வாழ்க்கையில் குறுக்கே வரக்கூடாது என்று எழுதி, அந்த பேப்பரை சுருட்டி அந்த வெண்கடுகு டப்பாவுக்குள் போட்டு விடுங்கள். இதற்குள்ளே கொஞ்சமாக, அதாவது ஒரு துண்டு பெருங்காய கட்டியை மட்டும் போட்டு விட்டு டப்பாவை மூடி யாருக்கும் எட்டாத இடத்தில், அலமாரிக்கு மேலே வைத்து விடுங்கள். 48 நாட்கள் இந்த டப்பா அப்படியே இருக்கட்டும். 48 நாட்கள் கழித்து அந்த டப்பாவுக்கு உள்ளே இருக்கும் பொருட்களை அப்படியே கொண்டு போய் கால் படாத இடத்தில் போட்டு விடுங்கள். நீங்கள் எழுதிய பேப்பரை மட்டும் தனியாக எடுத்து சுக்கு நூறாக கிழித்து போட்டு விடுங்கள். இந்த டப்பாவை தயார் செய்யக்கூடிய வேலையை நீங்கள் எந்த நேரத்தில் எந்த கிழமையில் வேண்டுமென்றாலும் செய்யலாம். இதை செய்தால் உங்களுடைய எதிரியின் உயிருக்கு ஆபத்து வந்துவிடுமோ என்ற பயம் தேவையில்லை. எதிரிக்கோ, எதிரியின் குடும்ப உறுப்பினர்களுக்கோ எந்த பிரச்சனையும் வராது. உங்களுக்கு தொல்லை கொடுக்கும் எதிரி உங்களைப் பற்றி மறந்து விடுவான். உங்கள் வழியில் குறிப்பிட மாட்டான். அவ்வளவு தான். ஒரு வேலை பரிகாரத்தை செய்தும் எதிரி வந்து உங்களை தொல்லை கொடுத்துக் கொண்டே இருந்தால், 48 நாட்கள் கழித்து, மீண்டும் புது வெண்கடுகு வாங்கி இதே போல பரிகாரத்தை இன்னொரு முறை கூட முயற்சி செய்யலாம் தவறு கிடையாது. சரிங்க, கண்ணுக்கு தெரியாத எதிரி நம் முதுகுக்கு பின்னால் நின்று நம்மை கவிழ்க்க நினைக்கும் எதிரி அல்லது நண்பர்களாக உறவாடி நம்மை கவிழ்க்க பார்க்கும் எதிரிகளை என்ன செய்வது. ‘கண்ணுக்குத் தெரியாத என்னை வீழ்த்த நினைக்கும் எதிரி தொல்லை நீங்க வேண்டும்’ என்று எழுதி அந்த பேப்பரை மடித்து அந்த வெண்கணக்கு டப்பாவில் போட்டு வைத்தால் கண்ணுக்குத் தெரியாத பின்னால் குத்தும் எதிரிகள் கூட உங்கள் பக்கம் வர மாட்டார்கள். இதுதான் இந்த பரிகாரத்தில் இருக்கும் சூட்சமமே. பொ.பாலாஜிகணேஷ் 240.வேளாளர் தெரு கோவிலாம்பூண்டி சிதம்பரம்.608002 செல்.,9842550844