பல வருட கனவு நனவாக ஆரம்பித்துள்ளது. அது என்னவென்றால் இந்திய அணி FIFA கால்பந்து உலகக்கோப்பை தகுதி சுற்று போட்டியில் தனது முதல் வெற்றியை பதிவு செய்துள்ளது. சமீப காலமாக இந்திய அணியின் செயல்பாடு மிக நன்றாக உள்ளது. குறிப்பாக இவ்வருடம் பல கோப்பைகளை வென்று அசத்தியுள்ளது. அதில், ஆசிய கால்பந்து சாம்பியன்ஷிப் தொடரை வென்றதும், பிறகு இன்டெர்காண்டினெண்டல் கோப்பையை வென்றதும், உலக கால்பந்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. அதுமட்டுமில்லாமல் உலக கால்பந்து தரவரிசையில் 136 ஆவது இடத்திலிருந்து 102 ஆவது இடத்திற்கு இந்தியா முன்னேறியுள்ளது. இது இந்திய மக்களை கால்பந்து பக்கம் திரும்பி பார்க்க வைத்துள்ளது. இதுவரை கால்பந்து தகுதி சுற்றில் சிறப்பாக செயல்படாத இந்திய அணி, தகுதி சுற்றில் வெல்லுமா என்பது குறித்து இக்கட்டுரையில் காணலாம்.

FIFA உலகக்கோப்பை தகுதி சுற்று

2026 ஆம் ஆண்டிற்கான FIFA கால்பந்து உலகக்கோப்பை தொடர் கனடா, மெக்ஸிகோ மற்றும் யுனைடெட் ஸ்டேட்ஸ் ஆகிய நாடுகளில் நடக்க உள்ளது. தற்போது அதற்கான தகுதி சுற்று ஒவ்வொரு கண்டத்திலும் நடக்க உள்ளது. தற்போது ஆசிய கண்டத்திலுள்ள அணிகளுக்கு இடையே போட்டிகள் நடக்க உள்ளன. அதில் 36 அணிகள் பங்கேற்க உள்ளன. அந்த அணிகளை 9 பிரிவுகளாக பிரித்து ஒவ்வொரு அணிகளும் தங்களுக்குள் தலா 2 முறை விளையாடும். தொடரின் முடிவில் எந்த அணி முதல் இரு இடங்களை பிடித்திருக்கிறதோ அந்த அணிகள் 2026 ஆம் ஆண்டிற்கான கால்பந்து உலகக்கோப்பைக்கு தகுதிபெறும்.


தற்போதைய இந்திய கால்பந்து அணி

தகுதி சுற்றில் இந்திய அணியின் ஆதிக்கம்

"A" பிரிவில் இடம்பிடித்துள்ள இந்திய அணி தனது முதல் சுற்றில் பலம் வாய்ந்த குவைத் அணியிடம் மோதியது. ரசிகர்களின் எதிர்பார்ப்புக்கு மத்தியில் களமிறங்கிய சுனில் சேத்ரி தலைமையிலான இந்திய அணி குவைத் அணியை புரட்டி எடுத்தது. இந்திய அணியில் டிபென்ஸ் வீரர்கள் குவைத் அணியின் கோல்களுக்கு முட்டுக்கட்டை போட்டனர். ஆட்டத்தின் 75 ஆவது நிமிடத்தில் இந்தியாவின் லல்லியன்சுவாலா சாங்டே உதவியுடன் மண்விர் கோல் அடித்தார். ஆட்ட நேர முடிவில் 1-0 என்று இந்திய அணி வெற்றி பெற்றது.

உலகக்கோப்பைக்கு தகுதி பெறுமா இந்திய அணி?

குவைத்தை தோற்கடித்த கையோடு 2 ஆவது சுற்றில் ஆசியாவிலேயே பலம் வாய்ந்த கத்தார் அணியை இன்று சந்திக்க உள்ளது இந்திய அணி. இன்றைய ஆட்டத்தில் இந்திய அணி வெற்றி பெற்றால் 3 ஆவது சுற்றுக்கு முன்னேறும். ஏறக்குறைய இந்த சுற்றில் வெற்றி பெற்றால் இந்தியா FIFA கால்பந்து உலகக்கோப்பைக்கு சென்று விடும்.

Updated On 21 Nov 2023 6:13 PM IST
ராணி

ராணி

Next Story