சுதந்திர போராட்ட வீரரும், தமிழகத்தின் மிக மூத்த அரசியல் தலைவர்களில் ஒருவராகவும் திகழ்ந்த சங்கரய்யா உடல் நலக் குறைவால் இன்று காலமானார்.

யார் இந்த சங்கரய்யா?

102 வயதான சங்கரய்யா 1921ஆம் ஆண்டு ஜூலை மாதம், திருநெல்வேலி மாவட்டம் ஆத்தூரில் பிறந்தார். பள்ளிப்பருவத்திலேயே சுதந்திர தாகத்தின் காரணமாக அரசியலுக்குள் நுழைந்தார், பிறகு நமது நாட்டின் சுதந்திரதிற்காக தீவிரமாக போராடினார். இவரது இந்த போராட்ட வாழ்க்கைப் பயணத்தில் சுமார் இரண்டு ஆண்டுகள் தலைமறைவு வாழ்க்கையும், ஒன்பது ஆண்டுகள் சிறை வாழ்க்கை என இவர் பட்ட அல்லர்ப்பாடுகள் ஏராளம். மேலும், தன்னை கம்யூனிஸ்ட் கட்சியில் இணைத்துக்கொண்ட இவர், இரண்டு முறை சட்டமன்ற உறுப்பினராகவும் பணியாற்றியுள்ளார். பிறகு 1995 முதல் 2002 ஆம் ஆண்டு வரை தமிழ்நாடு மாநில மார்க்சிஸ்ட் கட்சியின் செயலாளராகவும் பணியாற்றினார்.

வயது முதிர்வு காரணமாக சில ஆண்டுகளாக வீட்டில் இருந்தபடியே ஓய்வெடுத்து வந்த சங்கரய்யாவுக்கு நமது தமிழக அரசு ‘தகைசால் தமிழர்’ விருது வழங்கி கெளரவித்திருந்தது.


உடல்நலக் குறைவால் காலமானார் சங்கரய்யா:

சில நாட்களுக்கு முன்பு சங்கரய்யாவுக்கு உடல் நலக் குறைவு ஏற்பட, சென்னை ஆயிரம் விளக்கு அப்பலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அன்று அவருக்கு காய்ச்சல் மற்றும் சளி காரணமாக ஆக்சிஜன் குறைவு ஏற்பட்டதால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக தகவல் வெளியானது. இந்நிலையில் சிகிச்சை பலனின்றி சங்கரய்யா இன்று காலை காலமானார். சங்கரய்யாவின் உடல் சென்னையிலுள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமை அலுவலகத்தில் பொதுமக்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.

Updated On
ராணி

ராணி

Next Story