இந்த கட்டுரையை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்

ஒரு நபர் உங்களைப் போல தோற்றமளிக்க முடியுமா? பதில் என்னவென்றால் ஆம். செயற்கை நுண்ணறிவியல் (AI - Artificial Intelligence) மூலம் யாரையும் யாராக வேண்டுமானாலும் மாற்றலாம். 2023ல அதிகமாக கேட்ட வார்த்தை இந்த AI. புதுப்புது AI ரிலீஸ் ஆச்சு. லேர்னிங், எடிட்டிங், கிராபிக் டிசைன், மார்க்கெட் இந்த மாதிரி பல விஷயத்துக்கு AI யூஸ் ஆயிருக்கு. இப்படி பல நன்மைகள் இருக்கிற AI-க்கு இன்னொரு கோரமுகம் இருக்கு. அது ரொம்பவே ஆபத்தானது. அது இந்த டெக்னாலஜி ஓட மோசமான பிம்பம்னே சொல்லலாம். அப்படி அந்த மோசமான பிம்பத்துல ஒன்னுதான் இந்த டீப் ஃபேக். ஒருவரின் ஒப்புதல் இல்லாமல் அவரை ஆபாசமாகச் சித்திரிக்கும் இத்தகைய தொழில்நுட்பம்தான் இந்த டீப் ஃபேக். இதை நாம் எப்படி எதிர்கொள்ளப் போகிறோம் என்று தெரியவில்லை. இந்தியா போன்ற நாடுகளில் இது இன்னும் சிக்கலாகத்தான் இருக்கிறது. நாளுக்கு நாள் இதனால் பாதிக்கப்பட்டவர்கள் அதிகமாகி கொண்டேதான் இருக்கிறார்கள். டீப் ஃபேக் டெக்னாலஜி... அப்படியென்றால் என்ன? இந்த டீப் ஃபேக் எப்படி வேலை செய்கிறது? டீப் ஃபேக் டெக்னாலஜி ஒரு அச்சுறுத்தும் வடிவமாக மாறிக்கொண்டு வருவது ஏன்? என்பதை பற்றியெல்லாம் இக்கட்டுரையில் காணலாம்.

டீப் ஃபேக் எப்படி பிரபலமடைந்தது?

முதன்முதலில் நடிகை ராஷ்மிகா மந்தனாவின் போலி வீடியோ வெளியாகி, பெரிய அளவில் சர்ச்சையை ஏற்படுத்தியது. இங்கிருந்துதான் டீப் ஃபேக் AI பிரபலமடைய ஆரம்பித்தது. அதை தொடர்ந்து பாலிவுட் நடிகைகள் கஜோல், ஆலியா பட், கத்ரீனா கைஃப் இப்போ பிரியங்கா சோப்ரா போன்றவர்களுடைய டீப் ஃபேக் வீடியோ இணையதளத்தில் வெளியாகி அதிக பேசு பொருளாக மாறிக்கொண்டே வந்தது. நிறைய நபர்களை அச்சுறுத்தவும் செய்தது. செயற்கை நுண்ணறிவியல்(AI) எனப்படும் ஏ.ஐ தொழில்நுட்பத்தைத் தவறாகப் பயன்படுத்தி, இது போன்ற வீடியோக்களைத் தயாரித்து வெளியிடுகின்றனர். இந்த வீடியோக்கள் அவர்களை மனதளவில் அதிகம் பாதிக்கும். இந்த நிகழ்வு நடிகைகளோடு நிற்காது. பின் நாட்களில் நமக்கு தெரிந்தவர்களுக்கும் கூட நடக்கலாம். ஏன் நம் குடும்பத்தில் இருக்கும் நபர்களுக்கு கூட ஏற்படலாம்.


வைரலான ராஷ்மிகா மந்தனாவின் டீப் ஃபேக் வீடியோ காட்சி

டீப் ஃபேக்கின் கோரமுகம்

டீப் ஃபேக்கின் தொடக்கம், நடிகை ராஷ்மிகா மந்தனாவின் வீடியோ இல்லை. ஒரு அதிர்ச்சிகரமான தகவல் என்னவென்றால் இணையதளத்தில் குறிப்பாக ஒருசில சோஷியல் மீடியா தளங்களில் நமக்கு தெரியாத நிறைய பெண்களின் டீப் ஃபேக் பண்ணப்பட்ட விடியோக்கள் வெளியாகி கொண்டேதான் இருக்கின்றன. அவற்றால் பாதிக்கப்படுவது முகம் தெரிந்த பிரபலங்களும், முகம் தெரியாத பல அப்பாவி பெண்களும்தான். 2019 ஆம் ஆண்டு டீப்ட்ரெஸ் என்கிற ஆம்ஸ்டர்டம் சைபர் செக்யூரிட்டி மையம் ஒரு தகவலை வெளியிடுகிறார்கள். 2019 ஆம் ஆண்டு மட்டும் 15000 டீப் ஃபேக் பண்ணப்பட்ட வீடியோக்கள் இணையதளத்தில் இருக்கின்றன என்ற செய்திதான் அது. 2019 ஆண்டே இப்படி என்றால் அப்பொழுதைவிட தற்போது டெக்னாலஜி மேலும் வளர்ந்துவிட்டது. எனவே எவ்வளவு டீப் ஃபேக் பண்ணப்பட்ட வீடியோக்கள் ஆன்லைனில் உலாவி கொண்டிருக்கும்?

டீப் ஃபேக் என்றால் என்ன?

இது ஒரு செயற்கை நுண்ணறிவு (AI) அடிப்படையில் புகைப்படத்தையும் வீடியோவையும் கையாளும் நுட்பமாகும். எடுத்துக்காட்டாக, ஒரு யதார்த்தமான வீடியோவை உருவாக்க மற்றொரு நபரின் முகம், உடல் அல்லது ஒலிகளை மிகைப்படுத்தம் தளம்தான் இந்த டீப் ஃபேக். டீப்லேர்னிங் + ஃபேக், இதுதான் தற்போது அனைவரும் பேசுற இந்த டீப் ஃபேக். AI நியூரல் நெட்வொர்க் என்னும் நெட்வொர்க் மூலமாக இதை உருவாக்குகிறார்கள்.


AI மூலம் டீப் ஃபேக் செய்யப்படுதல்

டீப் ஃபேக் எப்படி வேலை செய்கிறது?

இந்த டீப் ஃபேக் எப்படி வேலை செய்கின்றது என்றால் GAN என்று சொல்லப்படுகிற ஒரு நியூரல் நெட்வொர்க்கால் வேலை செய்யப்படுகிறது. GAN என்றால் ஜெனரேட்டிவ் அட்வெர்சியல் நெட்வொர்க். இந்த அல்கோரிதம் எப்படி வேலை செய்கிறது என்பதைப் பார்ப்போம். ஜெனரேட்டிவ் அட்வெர்சியல் நெட்வொர்க்கில் இரண்டு பகுதிகள் இருக்கின்றன. ஒன்று ஜெனெரேட்டர். இன்னொன்று டிஸ்கிரிமினேட்டர். இதை பற்றி விரிவாய் பார்ப்போம்.

இப்பொழுது என்னிடம் x என்ற நபரின் 10 போட்டோக்கள் அல்லது வீடியோக்களும், y என்ற நபரின் வீடியோக்களும் உள்ளதாக எடுத்துக்கொள்வோம். எனக்கு நபர் x அவர்களை y நபரை போல் மாற்ற வேண்டும். அப்போது நபர் x ஓட போட்டோவை இந்த GAN நெட்வொர்க்கிற்குள் கொண்டு வருகிறேன். அதுமட்டுமில்லாமல் y ஓட வீடியோவையும் கொண்டு வருகிறேன். GAN நெட்வொர்க்கிற்குள் இருக்க ஜெனரேட்டர் நபர் x உடைய அனைத்து போட்டோவையும் ஒரே டேட்டாவாக எடுத்துக்கொள்ளும். அந்த போட்டோக்கள் அனைத்தையும் ஒன்று சேர்த்து ஒரு போட்டோவாக உருவாக்கும். அதை இன்னொரு பகுதியான டிஸ்கிரிமினேட்டர் ஆய்வு செய்யும். நபர் y கூட சரியாக மேட்ச் ஆகிறதா என்று பார்க்கும். பிறகு அந்த இமேஜ் சரியாக இல்லையென்றால் டிஸ்கிரிமினேட்டர்கிட்ட இருந்து ஜெனரேட்டருக்கு கமெண்ட் போகும். அதுக்கேற்ற மாதிரி ஜெனரேட்டர் போட்டோவை ஜெனரேட் பண்ணி தரும். இது சுழற்சிமுறையில் நடக்கும். இந்த பிராசஸ் முடிந்து வெளியே வருகிற அவுட்புட்தான் டீப் ஃபேக் வீடியோக்கள். அண்மையில் பிரபலங்கள் பல்வேறு பாடல்களை பாடுவது போல வெளியான வீடியோக்களும் இந்த டெக்னாலஜியில் செய்யப்பட்டவைதான்.


முக பாவனைகளை வைத்து தோற்றத்தை மாற்றும் டெக்னாலஜி

இதுமட்டுமில்லாமல், டெலிகிராம் தளத்தில் Undress AI என்ற Bot உள்ளது. இது அப்பக்கத்தில் பதிவேற்றம் செய்யப்படும் புகைப்படங்களை, ஒரு நொடியில் நிர்வாண புகைப்படங்களாக மாற்றித்தருகிறது. இது ஸ்கேமர்களுக்கு மிகவும் எளிதாகி விடுகிறது. எனவே சமூக வலைதளங்களில் புகைப்படங்களை பதிவேற்றம் செய்வதில் மிகவும் எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டிய நிலை உள்ளது.

டீப் ஃபேக் மூலம் ஏற்படும் விளைவுகள் என்ன?

இதன்மூலம் ஒருவர் மீது தவறான பிம்பத்தை ஏற்படுத்திவிட முடியும். பிரபலங்களை தவறாக சித்தரிக்க முடியும். இதில் கவனிக்கப்பட வேண்டிய விஷயம் என்னவென்றால், தவறாக சித்தரிக்கப்படும் பெண், எத்தனை பேரிடம் உண்மை தன்மையை புரிய வைக்க முடியும்? எனவே தவறான சித்தரிப்புகளால் பாதிக்கப்படுபவர்கள் கடும் மன உளைச்சலுக்கு ஆளாக நேரிடும். எதிர்காலத்தில் அரசியலிலும் இதனால் தாக்கம் ஏற்பட அதிக வாய்ப்பு இருப்பதாகக் கூறப்படுகிறது. மேலும் இந்த டெக்னாலஜியை பயன்படுத்தி நமக்கு தெரிந்தவர்கள் போலவே பேசி, ஸ்கேமர்கள், பண மோசடியில் ஈடுபட்டுவரும் தகவல்களும் வெளியாகி வருகின்றன.


டீப் ஃபேக்கால் பாதிக்கப்பட்டவர்கள் செய்யவேண்டியவை

டீப் ஃபேக்கால் பாதிக்கப்பட்டவர்கள் என்ன செய்யலாம்?

டீப் ஃபேக் பண்ண வீடியோல இருக்க நபருடைய கண்ணை கூர்ந்து கவனிப்பது மூலமாக வீடியோவின் உண்மை தன்மையை கண்டுபிடிக்கலாம். ஏன்னா கண் சிமிட்டலை அவ்வளவு சரியாக இதில் உருவாக்க முடியாது. முகத்துல செட் ஆகாத மாதிரி இருக்கும். இன்னொன்று டீப் ஃபேக் பண்ண வீடியோல முகத்திற்கு நேராக கையோ இல்லை வேறு ஏதும் பொருள் வந்தால் அந்த முகத்தில் அலைகள் ஏற்படும். டெக்னாலஜி வளர வளர இதை கண்டுபிடிப்பதும் கடினமாகிவிடும் போல.

ஒருவேளை நீங்களோ, உங்களுக்கு தெரிந்தவர்களோ இதனால் பாதிக்கப்பட்டால், stopncii.org என்ற வெப்சைட்டில் புகார் ஃபைல் பண்ணி உங்களுடைய ஒரிஜினல் புகைப்படங்களை அப்பக்கத்தில் பதிவேற்றம் செய்தால், அந்த அமைப்பு உங்களுடைய ஃபேக் போட்டோக்கள் மற்றும் வீடியோக்களை சமூக வலைதளங்களில் இருந்து நீக்கிவிடும். இதில் புகார் செய்வது மிகவும் சுலபம்.

Updated On 25 Dec 2023 7:27 PM GMT
ராணி

ராணி

Next Story