இந்த கட்டுரையை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்

ஐபிஎல் கிரிக்கெட்டின் 18ஆவது சீசன் திருவிழாவானது வரும் 22ஆம் தேதி ஆரம்பமாகவுள்ளது. 10 அணிகள் பங்கேற்கும் இத்தொடரில் எந்த அணி கோப்பையை வென்று சாம்பியன் பட்டத்தை வெல்லும் என்ற எதிர்பார்ப்பு, ரசிகர்கள் மத்தியில் தற்போதே தொடங்கிவிட்டது. இத்தொடர் தொடங்குவதற்கு இன்னும் சில நாட்கள் மட்டுமே உள்ள நிலையில், அனைத்து அணிகளும் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றன. இத்தொகுப்பில் ஐபிஎல் அணிகளின் பலம் மற்றும் பலவீனத்தை பற்றி விரிவாக பார்ப்போம்.


சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் ஜடேஜா, தோனி மற்றும் மும்பை அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா

சென்னை சூப்பர் கிங்ஸ்

பலம்: கான்வே, ரச்சின், அஷ்வின், சாம் கரண் போன்ற பழைய வீரர்களை வாங்கி அணியை வலுப்படுத்தியுள்ளது சென்னை. அதுமட்டுமில்லாமல் நூர், ஜடேஜா மற்றும் அஷ்வின் ஆகியோர் சுழற்பந்துவீச்சை மிகவும் வலுப்படுத்துகிறார்கள். அணியில் மொத்தம் 9 ஆல்ரவுண்டர்கள் இருக்கிறார்கள். இதில் 5 பேர் கண்டிப்பாக அணியில் விளையாடுவார்கள் என்பதால் நிச்சயம் இது சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு மிகப்பெரிய பலமாக இருக்கும்.

பலவீனம் : 42 வயதான தோனி மட்டுமே ஃபினிஷர் என்று சொல்லலாம். கரண், ஜடேஜா, அஷ்வின் ஆகியோர் ஃபினிஷர்களாக பலவீனமாக இருகின்றனர். வேகப்பந்து வீச்சும் பலவீனமாக இருக்கிறது. இளம் வேகப்பந்து வீச்சாளர்கள் மீது அதிக பணம் முதலீடு செய்து இருப்பதால் இது ஆபத்தானதாக கூட முடியலாம்.

மும்பை இந்தியன்ஸ்

பலம்: இந்திய அணியின் சர்வதேச வீரர்கள் இருப்பதால், மும்பை இந்தியன்ஸ் அணியின் டாப் ஆர்டர் பேட்டிங் வலுவாக உள்ளது. பும்ரா, போல்ட் மற்றும் சாஹர், வேகப்பந்து வீச்சை வலுப்படுத்துகிறார்கள். சாண்ட்னர் மற்றும் முஜீப் சுழற்பந்துவீச்சை வலுப்படுத்துகிறார்கள்.

பலவீனம்: ஹர்திக்கை தவிர அணியில் வேறு எந்த ஃபினிஷரும் இல்லை. இளம் வீரர் ராபின் மின்ஜ் 7வது இடத்தில் வருவார். அவர் தோல்வியடைந்தால் அணியின் ஃபினிஷிங் மிகவும் பலவீனமாகிவிடும்.


கொல்கத்தா அணியின் சுனில் நரைன் மற்றும் ஹைதராபாத் அணியின் நட்சத்திர பந்துவீச்சாளர் ஷமி

கொல்கத்தா நைட் ரைடர்ஸ்

பலம்: 4-வது இடத்திலிருந்து 7-வது இடம் வரை டாப் கிளாஸ் ஃபினிஷர்கள் உள்ளனர். நரைன் ஓப்பனிங் செய்தால் பந்துவீச்சை அதிகரிக்கவும் வாய்ப்பு உள்ளது. சக்ரவர்த்தி, ஹர்ஷித், நோர்கியா, வைபவ் ஆகியோரும் பந்துவீச்சை வலுப்படுத்துகிறார்கள்.

பலவீனம்: கேப்டன் ஷ்ரேயஸ் வாங்கப்படவில்லை; முந்தைய கேப்டன் ஷ்ரேயாஸை பஞ்சாப் அணி வாங்கியது. வெங்கடேஷுக்கு நிறைய பணம் செலவழிக்கப்பட்டது. ஆனால் அவரை பிளேயிங் 11ல் பொருத்துவது கடினம். அவரது இருப்பு அணியின் டாப் ஆர்டரை பலவீனப்படுத்துகிறது.

சன்ரைசர்ஸ் ஹைதராபாத்

பலம்: டாப்-5 பேட்ஸ்மேன்கள் மிகவும் அதிரடியானவர்கள், கடந்த சீசனில், அவர்களின் உதவியுடன், ஐபிஎல்லின் சிறந்த ஸ்கோர் உருவாக்கப்பட்டது. ஹர்ஷல் மற்றும் ஷமியை வாங்கியதன் மூலம் பந்துவீச்சும் பலப்படுத்தப்பட்டுள்ளது.

பலவீனம்: கிளாசனுக்குப் பிறகு பினிஷிங் ஆப்ஷன்கள் பலவீனமாக உள்ளன. மனோகர் மற்றும் மெண்டிஸ் போன்ற வீரர்கள் உள்ளனர். ஆனால் அவர்களால் அணியின் பலத்தை அதிகரிக்க முடியவில்லை. அதுமட்டுமில்லாமல் டெத் ஓவர்களில் ஷமியை தவிர சிறப்பான பந்துவீச்சாளர்கள் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு

பலம்: மேக்ஸ்வெல், பந்த், ராகுல், ஷ்ரேயாஸ் போன்றவர்களை ஏலம் எடுக்கவில்லை. சால்ட், லிவிங்ஸ்டோன், ஜிதேஷ், க்ருணால் போன்ற T20 ஸ்பெஷல் பிளேயர்களை வாங்கியது. புவனேஷ்வர், தயாள் மற்றும் ராசிக் ஆகியோர் பந்துவீச்சை வலுப்படுத்துகிறார்கள்.

பலவீனம்: சுயாஷ் சர்மா மட்டுமே சுழற்பந்து வீச்சாளராக இருக்கிறார். டு பிளெசிஸை விடுவித்த பிறகு ரஜத் படிதாரை கேப்டனாக நியமித்தது. அவருக்கும் கேப்டன்சியில் பெரிய அனுபவம் இல்லாததால், இந்த அணி எப்படி விளையாட போகிறது என்று தெரியவில்லை.

டெல்லி கேபிடல்ஸ்

பலம் : டெல்லி அணி ஏலத்தில் மிகவும் புத்திசாலித்தனமாக செயல்பட்டது. ராகுல், ஸ்டார்க், நடராஜன், அசுதோஷ் போன்ற வீரர்களை அந்த அணி குறைந்த விலைக்கு வாங்கியது. பேட்டிங் மற்றும் பவுலிங் துறைகள் இரண்டும் வலுவாக உள்ளன.

பலவீனம்: இந்த அணியில் பெரிதாக பினிஷர்கள் இல்லை . அஷுடோஷ் சர்மா ஜொலிக்க தவறினால் இந்த அணி கவிழ்ந்துவிடும். அதுமட்டுமில்லாமல் எந்த வெளிநாட்டவரும் அணிக்கு வாங்கப்படவில்லை.


பஞ்சாப் அணியின் கேப்டன் ஷ்ரேயஸ் ஐயர் மற்றும் லக்னோ அணியின் அதிரடி ஆட்டக்காரர் நிக்கோலஸ் பூரன்

பஞ்சாப் கிங்ஸ்

பலம்: ஷ்ரேயாஸ் வடிவில் ஒரு நிலையான கேப்டனை வாங்கினார் ரிக்கி பாண்டிங். வதேரா, மேக்ஸ்வெல், ஸ்டோய்னிஸ் ஆகியோருடன் பேட்டிங் வலுவாக இருக்கிறது. அர்ஷ்தீப், சாஹல் மற்றும் ஜான்சன் ஆகியோரும் பந்துவீச்சை வலுப்படுத்துகிறார்கள்.

பலவீனம்: கடந்த சில வருடங்களாக ஐபிஎல்லில் மேக்ஸ்வெல் தோல்வியடைந்து வருகிறார். பெர்குசனும் சில சமயங்களில் ரன்களை வாரி வழங்குவார். ஸ்பின்னர்களில் சாஹலை மட்டுமே நம்பியிருக்கிறது.

லக்னோ சூப்பர்ஜெயண்ட்ஸ்

பலம்: பூரன், மில்லர், ஷாபாஸ் மற்றும் சமத் ஆகியோர் பினிஷிங் செய்ய இருக்கிறார்கள். அதுமட்டுமில்லாமல் அணியின் கேப்டனாக பந்த் இருப்பதால் மிடில் ஆர்டரையும் வலுப்படுத்துகிறார்.

பலவீனம்: மார்ஷ் மற்றும் மார்க்ராம் டி20யில் ஃபார்மில் இல்லை. இருவரும் சிறப்பாக செயல்படவில்லை என்றால், பவர்பிளேயிலிருந்தே லக்னோ அணிக்கு அழுத்தம் ஏற்படும். மொஹ்சின் மற்றும் மயங்கின் உடற்தகுதியும் அணிக்கு கவலையாக இருக்கிறது.


குஜராத் அணியின் துவக்க வீரர் பட்லர் மற்றும் ஆர்ச்சர்

குஜராத் டைட்டன்ஸ்

பலம்: பட்லரின் வருகை தொடக்கத்தை வலுப்படுத்துகிறது. மேலும் வலுவான விக்கெட் கீப்பிங் பணியையும் பட்லர் செய்வார். பினிஷிங் மற்றும் பந்துவீச்சு மேலும் பலப்படுத்தப்பட்டுள்ளது.

பலவீனம்: ஷாருக்கும் லோம்ரோரும் மிடில் ஆர்டரில் ஆபத்தான வீரர்கள். ஆனால் இருவரும் நிலையான வீரர்கள் கிடையாது. சிராஜ், பிரசித் கிருஷ்ணா மற்றும் இஷாந்த் சர்மா சில சமயங்களில் ரன்களை வாரி வழங்குவர். இது குஜராத் அணிக்கு சற்று பின்னடைவாக அமையும்.

ராஜஸ்தான் ராயல்ஸ்

பலம்: பேட்ஸ்மேன்களை மட்டுமே ரீட்டென்ஷனில் தக்கவைத்துக் கொண்டு, ஏலத்தில் நிதிஷ் ராணா மற்றும் சுபம் துபே ஆகியோரை வாங்கியதன் மூலம் பேட்டிங்கை மேலும் வலுப்படுத்தி இருக்கிறது. ஹஸ்ரங்கா, ஆர்ச்சர், ஃபரூக்கி மற்றும் சந்தீப் சர்மா ஆகியோர் பந்துவீச்சுத் துறையை வலுப்படுத்தி வருகின்றனர்.

பலவீனம்: ஹெட்மியரை ஆதரிக்க நல்ல பினிஷர்கள் இல்லை. அதுமட்டுமில்லாமல் ஆர்ச்சரை தவிர்த்து அனுபவம் இல்லாத வேகப்பந்து வீச்சாளர்கள் நிறைய பேர் இருக்கிறார்கள். இது அணிக்கு மேலும் பின்னடைவாகும்.

Updated On 18 March 2025 10:30 AM IST
ராணி

ராணி

Next Story